Actress Rekha: என்னோட பர்மிஷன் இல்லாமத்தான் கமல் கிஸ் பண்ணாரு.. ட்ரெண்டிங்கில் ரேகா வீடியோ!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை எலிமினேட் செய்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறி பிரதீப்பை எலிமினேட் செய்துள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் தன்னுடைய அதிகமான படங்களில் நாயகிகளுடன் லிப்லாக் செய்துள்ள கமல்ஹாசன் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதா என்று யுகேந்திரன் மனைவி உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதிகமான போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்துள்ள நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்துள்ளார். கமலின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
யுகேந்திரன் மனைவி கேள்வி: கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட நடிகர் யுகேந்திரனின் மனைவி, கமல்ஹாசனின் இந்த செயல்குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். புன்னகை மன்னன் படத்தில் 16 வயதான நடிகை ரேகாவிற்கு அவரது ஒப்புதல் இல்லாமல் கமல்ஹாசன் லிப் கிஸ் கொடுத்ததாக கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். இது உண்மையா என்பதை தெளிவுப்படுத்துமாறும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
கமல் செயலுக்கு கண்டனம்: மேலும் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் நாயகிகளுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசுவது எந்தவகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல பல்வேறு தரப்பினரும் கமல் பிரதீப்பை எலிமினேட் செய்தது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு ஆங்கரிங் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கமலுடன் லிப் கிஸ் குறித்து ரேகா பேட்டி: நடிகை ரேகாவின் ஒப்புதல் இல்லாமல் கமல் அவருக்கு லிப் கிஸ் கொடுத்ததாக பல்வேறு காலங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விஷயம் உண்மைதான் என்று நடிகை ரேகா தெரிவித்துள்ள வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் பேசியுள்ள ரேகா, அந்தப் படத்தில் நடித்தபோது தான் மிகவும் சிறிய பெண் என்றும் 10வது படித்துவிட்டு நடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
கமல் ஒப்புதல் இல்லாமல் கிஸ் செய்ததாக ரேகா வெளிப்படை: இந்த விஷயத்தில் தன்னுடைய தந்தை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் இயக்குநரிடம் கூறியபோது, பெரிய கிங், குழந்தைக்கு முத்தம் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளும்படி இயக்குநர் தன்னை சமாதானப்படுத்தியதாக அவர் தன்னுடைய பேட்டியில் கூறியதாகவும் ரேகா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். படத்தில் இந்தக் காட்சி அசிங்கமாக தெரியாது என்றும் அவர் சமாதானப்படுத்தியதகாவும் அவர் கூறியுள்ளார்.
ஏமாற்றி முத்தம் கொடுத்ததாக புலம்பல்: மேலும் தன்னுடைய அம்மாவிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்ததாக தான் வருத்தப்பட்டதாகவும் ரேகா கூறியுள்ளார். இதுகுறித்து தான் அதிகமான பேட்டிகளில் கூறியுள்ளதாகவும் இதனால் கமலுக்கும் தன்மீது வருத்தம் இருக்கலாம் என்றும் கூறியுள்ள ரேகா, ஆனால் உண்மையை கூறவேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ரேகா கொடுத்துள்ள இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











