தனுஷ் கொஞ்சம் சும்மா இருங்க.. ஏன் இப்படி?.. தினமும் திட்டிய பிரபல நடிகை?.. அய்யோ இது வேறயா?

சென்னை: தனுஷ் நடிப்பில் குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களில் பவர் பாண்டி தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் (ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் வரவிருக்கும் இட்லி கடை வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அவரது ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு 50ஆவது படமாகும். முக்கியமாக அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மட்டும்தான் படத்துக்கு ஒரே ஆறுதலாக இருந்தது என்றும்; மற்றபடி படத்தில் ஒன்றுமே இல்லை; பல படங்களின் கலவையாகத்தான் இருந்தது என்று ரசிகர்கல் ஓபனாக கூறினார்கள்.

Throwback Stories Dhanush Saranya

அடுத்த படங்கள்: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் இந்த வருடத்துக்குள் ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படங்கள் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் அவர்; ஹிந்தி, ஹாலிவுட்டிலும் நடிக்கிறார். தற்போது ஹிந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: இதற்கிடையே தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இதில் பவிஷுடன் அனிகா, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நேற்று முன்தினம் வெளியான அந்தப் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் வெளியிட்ட நெருப்பில் பொசுங்கிப்போய்விட்டது. படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஜிவி பிரகாஷின் இசை, சரண்யாவின் நடிப்பு மட்டும்தான் படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்தது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Throwback Stories Dhanush Saranya

சரண்யாவுடன் காம்போ: தனுஷுடன் சரண்யா கூட்டணி வைத்தாலே அவர் ஏற்றிருக்கும் ரோல் அட்டகாசமாக அமைந்துவிடுகிறது. ஏற்கனவே சரண்யா மிகச்சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. தனுஷும், சரண்யாவும் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இரண்டு பேரின் கரியரிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. அதில் தனுஷுக்கு தாயாக நடித்திருந்தார் சரண்யா. தனக்கு கிடைத்த ஒவ்வொரு சீனிலும் சரண்யா அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டு சென்றார். இந்தச் சூழலில் அப்படத்தின் மீது அவருக்கு நம்பிக்கையே இருந்ததில்லையாம்.

Throwback Stories Dhanush Saranya

சரண்யா பேட்டி: அதுதொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிக்கும்போது; இதெல்லாம் ஒரு ரோல், இதுக்கு வேற என்னை தனுஷ் கூப்பிட்டிருக்காரே என்று நினைப்பேன். தினமும் அவரை அழைத்து எதற்கு என்னை இந்தப் படத்தில் போட்டீர்கள் என்று கேட்பேன். அதற்கு அவரோ, இருங்க மேடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்வார். அதற்கு நானோ, 'நீங்கள் சும்மா இருங்கள் தனுஷ்.என்னை இந்தப் படத்துக்கு நீங்கள் கூப்பிட்டிருக்கவே கூடாது. எதற்காக என்னை கூப்பிட்டீர்கள்' என திட்டிக்கொண்டே இருப்பேன்.

ஆனால் டப்பிங் பேசுகையில் பார்க்கும்போதுதான் இவ்வளவு சீன்களில் நான் நடித்திருக்கிறேனா என்று ஆச்சரியப்பட்டேன். இதெல்லாம் ஒரு படமா என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஏன் அப்படி தோன்றியது என்று இன்றுவரை தெரியவில்லை. பிறகுதான் தனுஷ் என்னிடம் வந்து இப்போவாவது ஒத்துக்கொள்கிறீர்களா இந்தப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என கேட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X