நடிப்பு, உதவியில் மட்டுமில்லை அந்த விஷயத்திலும் கேப்டன் விஜயகாந்த் கலக்குவார்.. நடிகை சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை அடுத்து தமிழ்நாடு முழுவதுமிலிருந்து மக்கள் படையெடுத்து சென்று தங்களது இறுதி அஞ்சலியை விஜயகாந்த்தின் உடலுக்கு செலுத்தினார்கள். கிட்டத்தட்ட 15 லட்சம்பேர்வரை இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயகாந்த் குறித்து நடிகை சீதா ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்தவர். அவரால் சாமானியர்கள் முதல் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா வரை உதவி பெற்றிருக்கிறார்கள். இதனாலேயே அனைவரது மனதிலும் அவருக்கென்று தனி இடம் இருக்கிறது. விஜயகாந்த் என்றாலே கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்; அவரது அலுவலகத்துக்கு சென்றால் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலைதான் இருந்தது. சினிமாவில் தன்னை போல் பிறரும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர் அவர்.

உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடெங்கிலும் இருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ரோல் மாடல்: விஜயகாந்த்தின் உதவும் குணத்தை பார்த்த தற்போதைய நடிகர்கள் அவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். நடிகர்கள் அருண் விஜய், புகழ் உள்ளிட்டோர் எல்லாம் விஜயகாந்த் வழியை பின்பற்றி நாங்களும் உதவிகளை செய்வோம் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நேற்று விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு சென்ற விஷால்கூட அங்கு வைத்து பலருக்கு அன்னதானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயர் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எங்கும் புகழ்: இப்படி விஜயகாந்த்தின் புகழ் எங்கும் இருக்கிறது. நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகளும் விஜயகாந்த்தை அன்போடும், நன்றியோடும் நினைவுகூர்ந்துவருகின்றனர். ராதிகாக்கூட ஒரு மேடையில் விஜயகாந்த் இருந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தைரியமாக போகலாம். அவர் எந்தப் பெண்ணையும் மரியாதை குறைவாக நடத்தமாட்டார் பேசமாட்டார் என்று தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு நடிகைகளிடமும் புகழையும், மதிப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர் விஜயகாந்த்.
ஜோதிடம் பார்க்கும் விஜயகாந்த்: இந்த சூழலில் விஜயகாந்த் குறித்த இன்னொரு சீக்ரெட் தெரியவந்திருக்கிறது. அதாவது விஜயகாந்த் நடிப்பு, சண்டை, உதவி ஆகியவை மட்டுமின்றி ஜோதிடமும் பார்ப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் யாராவது பேசிக்கொண்டிருந்தால் அவர்களிடம் உங்களது ராசி என்ன நட்சத்திரம் என்ன என்று கேட்டுவிட்டு; உங்களுக்கு இதெல்லாம் நடக்கும் என்று கூறுவாராம். அதேபோல் தன்னுடன் நடிப்பவர்களை அவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பாராம். இதனை நடிகை சீதா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











