Shakeela: பாட்ஷா பாய்னு நெனப்பு.. இப்படித்தான் சிகரெட் குடிக்க ஆரம்பிச்சாங்களாம்.. ஷகிலா ஓபன் டாக்!

சென்னை: நடிகை ஷகிலா, தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகை. மிகவும் தைரியமான நடிகையான இவர் பல இடங்களில் பலரும் எழுப்பத் தயங்கும், கேள்விகளை முன்வைத்து, அரங்கையே அதிரவைத்துள்ளார். தனது சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வரும் ஷகிலா, இப்போது சினிமாவிலும் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளிலும் நடித்தும் பங்கேற்றும் வருகின்றார். சின்னத்திரையில் இவரை மம்மி என பலரும் அழைக்கின்றனர். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் தான் எப்போதில் இருந்து சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “ என்னைப் பலபேர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், திருச்சூரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். ஒரு சிலரோ ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்தவர் என்கின்றனர். ஆனால் நான் பக்காவான சென்னைப் பொண்ணு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை கோடம்பாக்கம்தான். அம்மாவின் சொந்த ஊர் நெல்லூர் என்பதால் எனக்கு தெலுங்கும் தெரியும். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் எனது அப்பா என்னைப்போட்டு அடித்துக் கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த சினிமாக்காரர்கள் தடுக்க வந்தனர். அதன் பின்னர் நடந்ததைச் சொன்னபின்னர், நடிக்க வருகின்றாயா எனக் கேட்டனர். அப்பாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். எனக்கும் நடிக்க ஆசை இருந்ததால் நடிக்க வந்துவிட்டேன்.

shakeela shakeela interview shakeela throwback

சரக்கு: ஒருமுறை தெலுங்கு இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் எனது ஃபிளைட்டை கேன்சல் செய்யச் சொன்னார். உடனே, நான் ஏன் சார் எனக் கேட்டேன். உடனே அவர்,' வெளிநாட்டில் இருந்து எனது நண்பர்கள் வருகின்றார்கள், நீங்கள் இருந்தால் அனைவரும் ஒன்றாக சரக்கு அடிக்கலாம்' எனக் கூறினார். நான் உடனே, யாரென்று தெரியாதவர்களுடன் அமர்ந்து சரக்கு சாப்பிடுவதில்லை எனக் கூறிவிட்டேன். உடனே அந்த இயக்குநர், அடுத்தப் படத்துகான அட்வான்ஸையும் இப்போதே கொடுக்கின்றேன், நீங்கள் இருங்கள் எனக் கூறினார். அதற்கு, சாரி சார், நான் குடிப்பேன். ஆனால் யாரென்று தெரியாதவர்களுடன் இணைந்து குடிக்கமாட்டேன். மேலும் நீங்கள் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் கொடுப்பதால் நான் குடிப்பேன் என நினைக்காதீர்கள் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன் எனக் கூறினார்.

இப்படித்தான்: தொடர்ந்து பேசுகையில், ஒருமுறை எக்மோரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது பாலிவுட் நடிகை பூஜா பட்டின் படமும் நான் நடிக்கும் படமும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் அவரைச் சந்திக்கலாம் எனச் சென்றேன். ஒரு சிறிய அறையில் அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். அறை முழுவதும் சிகரெட்கள் கிடந்தது. நான் அவரைப் பார்த்து நீங்கள் சிகரெட் பிடித்தால் அப்பா திட்டமாட்டாரா அடிக்க மாட்டாரா எனக் கேட்டேன். அதற்கு அவர் நான் என் அப்பா முன்பே சிகரெட் பிடிப்பேன் எனக் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பாட்ஷா பாய்: மேலும், என்னை சிகரெட் பிடிக்கின்றாயா எனக் கேட்டார். நான் வேண்டாம் என்றேன், ஆனாலும் அவர் என்னைக் அழைத்து இப்படிதான் சிகரெட் பிடிக்க வேண்டும் எனக் கற்றுக்கொடுத்தார். நான் இப்போதுவரை சிகரெட் பிடிக்கின்றேன். தெலுங்கு பிக்பாஸில் ஒரு பெண் வந்து என் காலில் விழுந்தார். அப்போது நான் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தேன். அது ரெக்கார்டு ஆகும் எனத் தெரியும். ஆனால் டெலிகாஸ்ட் செய்வார்கள் என நினைக்கவில்லை. நான் அதைப் பார்த்தபோது, செம ஸ்டைலாக, பாட்ஷா பாய் மாதிரி இருக்கேன் என எனக்கே தோன்றியது” எனக் கூறினார். ஷகிலா இவ்வாறு அந்த பேட்டியில் தனியார் யூடூயூப் சேனலில் பேசியது இணையத்தில் உலா வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X