ஏன் டி இன்னும் பயப்படுற.. அப்படியே இருக்கியே... நடிகையை ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டிய கமல் ஹாசன்
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் கமல் ஹாசனை எப்போதும் ரோல் மாடலாக நினைப்பவர்கள் சினிமாவில் அதிகம். தற்கால பிஸி இயக்குநரான லோகேஷ் கனகராஜும் கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழலில் பிரபல நடிகையை கமல் ஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் தானோ என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுபவர் அவர்.

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.
கண்மணி அன்போடு காதலன்: வழக்கமான மெலடியாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதுவரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில்கூட அந்தப் பாடல் வரும்போது திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பேரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்றுவரை கனெக்ட் ஆகியிருக்கிறது. இப்படி பல புதுமைகளை அப்போதே புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.
நடிகையை அரட்டிய கமல் ஹாசன்: இந்தச் சூழலில் பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸை கமல் ஹாசன் அரட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கமல் ஹாசன் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன அமைப்பாளராக இருந்தபோது அவரிடம்தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ் நடனம் கற்றுக்கொண்டார். அதனால் கமலை எங்கு பார்த்தாலும் மாஸ்டர் ஜி என்றுதான் அழைப்பாராம். கடந்த பல வருடங்களாகவே கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்காமல் இருந்திருக்கிறார் சாந்தி. நிலைமை இப்படி இருக்க பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு மாமியாராக நடித்தார் சாந்தி வில்லியம்ஸ்.
ஏன் டி இன்னும் இப்படியே இருக்க: அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசனை பார்த்த சாந்தி, 'வணக்கம் மாஸ்டர் ஜி' என்று பவ்யமாக சொன்னாராம். அதற்கு கமல் ஹாசனோ, நீ என்னடி இப்பவும் பயப்படுற. அப்போ கூப்பிட்ட மாதிரியே இப்பவும் கூப்பிட்டுட்டு இருக்க. உனக்கும் வயசு ஆகிடுச்சு.. எனக்கும் வயசு ஆகிடுச்சு. இன்னும் என்னை பார்த்து பயப்படுற என்று சொல்லிவிட்டு; மாஸ்டர் ஜினு கூப்பிடுறது முதல நிப்பாட்டு என்று சொன்னாராம். இந்த விஷயத்தை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
யார் சாந்தி வில்லியம்ஸ்: நடிகை சாந்தி வில்லியம்ஸ் வியட்நாம் வீடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, ஜோடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் திருமுருகன் இயக்கி தமிழ்நாடு அளவில் மெகா ஹிட் அடித்த மெட்டி ஒலி சீரியலில் ராஜம் என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











