அவரு மூஞ்சியும், உயரமும்.. நடிக்க மறுத்த சில்க் ஸ்மிதா - கெஞ்சிய சத்யராஜ்
சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) சத்யராஜின் உருவத்தையும், உயரத்தையும் பார்த்து அவருடன் நடிகை சில்க் ஸ்மிதா நடிக்க மறுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது.

சில்க் ஸ்மிதா வளர்ச்சி: தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது. தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார்.
திராவிட பேரழகி சில்க் ஸ்மிதா: இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார்.
அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று. அந்தப் படத்தின் தன்னுடைய உடல் தேவையை ஒரு காட்சியில் பார்வையிலேயே கடத்தி பின்னி எடுத்திருப்பார் சில்க். அதனால்தான் யாரையும் அவ்வளவு எளிதாக பாராட்டிடாத பாலுமகேந்திரா சில்க்கை திராவிட பேரழகி என்று வர்ணித்தார்.
உடல் மட்டுமல்ல குரலிலும் கவர்ச்சி: கவர்ச்சி நடிகைகள் என்றாலே உடலில் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற பிம்பம் இருந்தது. ஆனால் அந்த பிம்பத்தை உடைத்து உடலில் மட்டுமல்லா குரலிலும் கவர்ச்சி காட்டினாலும் மேற்கொண்டு ஜொலிக்கலாம் என்பதை அனைவருக்குமே உணர்த்தியவர் சில்க். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரைத் தவிர்த்து இன்றுவரை எந்த நடிகையாலும் குரலிலே கவர்ச்சியை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
படம் ஹிட்டாகணுமா சில்க் பாட்டு வேண்டும்: அதேபோல் படத்துக்கு ஹீரோவின் முகம் எப்படி தேவைப்பட்டதோ அதேபோல் சில்க்கின் முகமும், அவரது நடனமும் தேவைப்பட்டது. ஏதேனும் ஒரு படத்தில் சில்க் ஸ்மிதா இல்லையென்றால் படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள் எப்படியாவது சில்க்கின் ஒரு பாடலை படத்துக்குள் இடம்பெறும்படி வைத்துவிடுங்கள் என்று கூறும் அளவுக்கு சில்க்கின் மீதான க்ரேஸ் இருந்தது. அப்படிப்பட்ட சில்க நடிகர் சத்யராஜுடன் நடிக்க மாட்டேன் என கூறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கனம் கோர்ட்டார் அவர்களே: அதாவது சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை சத்யராஜுக்கு இருந்ததாம். எனவேம் கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் நடிப்பத்ற்கு சில்க் ஸ்மிதாவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், சில்க் ஸ்மிதாவோ, நான் நடிக்கமாட்டேன். அவர் மூஞ்சிய பாருங்க, உயரத்தை பாருங்கள் என்னால் நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.
கெஞ்ச் வைக்காதம்மா: இதனையடுத்து அந்தப் படத்தின் இயக்குநர் சில்க்கிடம், ஏன்மா அவன் பெரிய ஜமீன் தார் குடும்பத்து பையன். அவனைப்போய் கெஞ்ச வைக்கிறியேம்மா என பல விஷயங்கள் கூறி ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாராம். இதனையடுத்து சில்க் ஸ்மிதாவும் சத்யராஜுடன் நடித்திருக்கிறார். அப்போது சத்யராஜின் குணநலன்களை பார்த்து இவரைப் போய் இப்படி நினைத்துவிட்டோமே என நினைத்துக்கொண்டு தொடர்ந்து சத்யராஜுடன் படங்களில் நடித்தாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











