Rajinikanth - பத்திரிகையில் வந்த செய்தி.. ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நடிகை வீட்டுக்கு சென்ற ரஜினி

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) பத்திரிகையில் வந்த செய்தியை படித்துவிட்டு ரஜினிகாந்த் தனது ஸ்கூட்டரில் நடிகையின் வீட்டுக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 Actress Sri Priya Shares a Memory With Rajinikanth

ஜெயிலர் ரிலீஸ்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக வெற்றிக்கு ஏங்கிகொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் ஜெயிலர் வெற்றியின் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் சிலாகிக்கின்றனர்.

வசூல் சாதனை படைக்குமா?: ஜெயிலர் படமானது தமிழ்நாடு முழுவதும் 900 ஸ்க்ரீன்களிலும், உலக அளவில் 4000 ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. இதன் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கும் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமின்றி இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் கூட்டம் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பல படங்களின் வசூல் சாதனையை கண்டிப்பாக முறியடிக்கும் என நம்புகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

நல்ல மனசுக்கு கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த்தின் நடிப்பைப் போலவே அவரது ரியல் லைஃப் நடவடிக்கைகளுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் அவர் அமர்ந்திருந்தாலும் மற்றவர்களின் மேல் மிகுந்த மரியாதையையும், அக்கறையையும் அவர் கொண்டிருப்பார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவதுண்டு. தற்போது நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில்கூட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டின் மனது கஷ்டப்பட்டுவிடக்கூடாது என ரஜினி செய்த செயலை ஜெயிலர் படத்தின் கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீப்ரியாவின் பகிர்தல்: இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலேயே தன்னுடன் பணியாற்றியவர்கள் மீது பெரும் அக்கறையை கொண்டிருந்தாராம் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட சம்பவம் இப்போது தெரியவந்திருக்கிறது. அதனை ரஜினியுடன் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீப்ரியா ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்துவிட்டார்: அதாவது ஸ்ரீப்ரியாவை தனது அப்பா, அம்மாவை பிரிந்து தனியாக வசிக்கிறார் என்று தனியார் பத்திரிகை ஒன்று எழுதிவிட்டதாம். இதனைப் படித்த ரஜினிகாந்த் பதறியடித்தபடி தன்னுடைய ஸ்கூட்டரில் ஸ்ரீப்ரியாவின் வீட்டுக்கு வந்துவிட்டாராம். வந்தவர் நேராக ஸ்ரீப்ரியாவிடம் சென்று, 'என்ன உங்களைப் பற்றி இப்படி எழுதியிருக்காங்க. அப்பா அம்மாவெல்லாம் பிரிந்து போய் வாழாதீர்கள். அவர்களுடன் வாழ்வதுதான் நமக்கு மரியாதையும், நிம்மதியும் கொடுக்கும்' என கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீப்ரியா இல்லை அது பொய்யான செய்தி என்று உறுதிப்படுத்திய பிறகுதான் ரஜினிகாந்த் அமைதியானாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X