Rajinikanth: ரஜினிகாந்த் மானத்தையே வாங்கிட்டாரே.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படியா? ஸ்ரீதேவி பளீச்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வெளியாகவுள்ளது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தனது பிறந்த நாளில் ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் ரஜினிகாந்த் குறித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ள சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தான் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து இப்போதும் முன்னணி நடிகர்கள். இவர்கள் படத்தில் கமிட் ஆகி விட்டால் நாம் கட்டாயம் பெரிய நடிகையாக, கவனிக்கப்படும் நடிகையாக மாறி விடுவோம் என பல நடிகைகள் இவர்களுடன் நடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். கமல்ஹாசன் கிளாஸான நடிப்பை வெளிப்படுத்துபவர் என்றால், ரஜினிகாந்த் மாஸான நடிப்பை வெளிப்படுத்துபவர். இது மொத்த இந்திய சினிமாவுக்கு தெரியும்.

Actress Sridevi Talks About Rajinikanth Throwback Goes Trending

அவர்கள் இருவருடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகை என்றால் அது, ஸ்ரீதேவியைக் குறிப்பிடலாம். திறமையான நடிகை, வசீகரமான தோற்றம் கொண்ட ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள கமல் ஹாசனும், ரஜினிகாந்த்தும் முயற்சி செய்தார்கள் என்ற பேச்சுகள் அப்போது உலா வந்தது. ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Actress Sridevi Talks About Rajinikanth Throwback Goes Trending

ரஜினிகாந்த்: இப்படியான நிலையில் இணையத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் பழைய வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடிக்கடி காணாமல் போய்விடுவார். இது ஒரு முறை மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல. அனைவரும் அவரை வலை வீசி தேடுவோம். ஷாட்டுக்கு எல்லோரும் தயாராக இருக்கும்போது ரஜினி இப்படி காணாமல் போய்விடுவார்.

Actress Sridevi Talks About Rajinikanth Throwback Goes Trending

மனமே போச்சு: இவரைக் காணவில்லை எனத் தெரிந்து பல இடங்களில் தேடிய பின்னர், இயக்குநர் கே. பாலசந்தர் சாரிடம் வந்து உதவியாளர்கள் கூறுவார்கள். உடனே அவர் கோபத்தில், எங்காவது கண்ணாடி இருக்கானு பாருங்க. அவன் அங்குதான் இருப்பான் எனக் கூறுவார் என நடிகை ஸ்ரீதேவி அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பார்த்த பலரும் ஸ்ரீதேவி இப்படி ரஜினிகாந்த் மானத்தையே வாங்கிட்டாரே எனக் கூறி வருகிறார்கள்.

ஸ்ரீதேவி மகள்: மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி கபூர் நடிப்பிலும் மாடலிங்கிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் நடித்த முதல் தென்னிந்திய மொழிப் படமான தேவாரா படத்தில் ஜான்வி கபூர் செம கிளாமராக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். படம் வசூல் ரீதியாக சொதப்பினாலும், ஜான்வி கபூரின் கிளாமருக்காக படத்தைப் பார்த்தவர்கள் தான் அதிகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X