ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா?.. இப்படி வேற நடந்திருக்கா?

சென்னை: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை ஊர்வசி விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜயகாந்த் என்றால் அனைவருக்குமே அவரது திடகாத்திரமான உடலும், கனீர் என்ற குரலும், கலையான உருவமும், அவர் செய்த உதவிகளும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். அவரால் உதவி பெற்று பலனடைந்தவர்கள் சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் உண்டு. விஜய், சூர்யா போன்ற இப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வளர்ந்த காலகட்டத்தில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அவர்களுக்கும், அந்தப் படங்களுக்கும் வெளிச்சத்தை பெற்றுத் தந்தவர் விஜயகாந்த்.

throwback stories urvashi vijayakanth

எதிர்க்கட்சி தலைவர்: ஏகப்பட்ட பேருக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கும் அவர் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். ஆனால் ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அவரது அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமிக்க ஆரம்பித்தது. பலர் அவருக்கு துரோகங்களை செய்தார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலான விஜயகாந்த்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அமெரிக்காவில் சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.

உயிரிழப்பு: அறுவை சிகிச்சை முடிந்தாலும் அவரது உடல்நிலை முன்னர் போல் இயல்பாக இல்லை. அதனையடுத்து அரசியலிலிருந்து ஒதுங்கிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் விஜயகாந்த் குறித்து நடிகை ஊர்வசி ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஊர்வசி பேட்டி: ஒரு யூட்யூப் சேனலுக்கு ஊர்வசி அளித்த பேட்டியில், "விஜயகாந்த்துடன் நடிக்க நான் கமிட்டானபோது, ஐயோ இந்தப் பொண்ணுக்கூட என்னால் நடிக்க முடியாது சார். நான் தங்கச்சினுதான் அவங்களை கூப்பிடுவேன் என்று கூறினார். இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எங்களுக்கான காதல் காட்சிகள் வரும்போதெல்லாம் அவர் என்னை உற்று பார்க்கவே மாட்டார். மேம்போக்காக நடித்துவிடுவார். அவருடன் ஒன்றோ, இரண்டு படங்களோதான் நடித்திருக்கிறேன்.

அநியாய வெள்ளை: அதேபோல் இந்தப் பொண்ணு அநியாயத்துக்கு வெள்ளையா இருக்கே நான் கேமராவில் எப்படி தெரிவேனோ என்றும் கிண்டலாக பேசுவார். முக்கியமாக அவர் சாப்பாடு போடும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் தென்னவன் படத்தில் நடித்தேன். அப்போதெல்லாம் சாப்பாடு விதவிதமாக இருக்கும். கிராமத்து சமையலும் இருக்கும். களி, கூழ் என அனைத்துமே இருக்கும். அவர் அனைவருக்குமே பாதுகாப்பாக இருந்தவர். அவருடைய ஷூட்டிங்காக இருந்தாலும் மற்ற ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி அவருடைய தலைமையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X