போடு செம ரிப்ளை.. குசும்புத்தனமாக கேள்வி கேட்ட அமெரிக்கருக்கு ஐஸ்வர்யா ராய் அளித்த பதிலடி தெரியுமா?

சென்னை: அமெரிக்க டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி குறித்த குட்டி ப்ளாஷ்பேக்

பெங்களூருவை பூர்வீகமாகக்கொண்டவர் ஐஸ்வர்யா ராய். கட்டட பொறியாளரான இவரது தந்தைக்கு மும்பையில் பணி கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். ஐஸ்வர்யா ராய் பள்ளி, கல்லூரி படிப்பை அங்கு முடித்தார்.

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட் ஐஸ்வர்யா ராய்

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட் ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் மாடலிங்கில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். குறிப்பாக 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரை மேலும் புகழடைய செய்தது. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரையுலகில் 1997ஆம் ஆண்டு அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.

முன்னணி நடிகையாக ஜொலித்த ஐஸ்வர்யா ராய்

முன்னணி நடிகையாக ஜொலித்த ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அர் ப்யார் ஹோ காயா என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார். இந்தப் படமும் 1997ஆம் ஆண்டு வெளியானது. தமிழ், ஹிந்தி என ஒரே சமயத்தில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்தனர்.

தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய்

தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய்

இருவர் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். 1998ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து தமிழில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் தனது கவனத்தை ஹிந்தி பக்கம் திருப்பினார். இதனால் தமிழில் நடிப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார்.

தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்த கடைசி படம்

தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்த கடைசி படம்

ஜீன்ஸ் படத்துக்கு பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா அதன் பின்னர் 2010அம் ஆண்டு வெளியான ராவணன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில்தான் நடித்தார். அதற்கிடையே ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். இதனையடுத்து சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.

திருமண செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்

திருமண செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் நடிக்க ஆரம்பித்த புதிதில் சல்மான் கானை காதலித்துவந்தார். ஆனால் சில காரணங்களால் அவர்களது காதல் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சில காலம் சிங்கிளாக இருந்த அவர் அபிஷேக் பச்சனை காதலித்தார். இருவரும் தீவிரமாக காதலித்துவந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட அமெரிக்க டிவி நிகழ்ச்சி

ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட அமெரிக்க டிவி நிகழ்ச்சி

ஐஸ்வர்யா ராய் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அமெரிக்க டிவி நிகழ்ச்சியான டேவிட் லெட்டர்மேனில் கலந்துகொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லெட்டர்மேன், "நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுடன் தான் இருக்கிறீர்களா" என கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா ராய் ஆம் என பதிலளித்தார்.

அமெரிக்கருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி

அமெரிக்கருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி

அதற்கு உடனே லெக்க்டர் மேன், "இந்தியாவில் குழந்தைகள் வளர்ந்த பிறகும் பெற்றோருடன்தான் இருப்பீர்களா" என்று கேள்வி கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா ராய், "ஆம். இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு நாங்கள் எங்கள் பெற்றோரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க தேவையில்லை சார்" என்று உடனடியாக பதிலடி கொடுத்தார். இந்த பதிலை கேட்ட டேவிட் லெட்டர் மேனுக்கு முகத்தில் ஈயாடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X