ஒரு முத்த காட்சி.. 2 வக்கீல் நோட்டீஸ்கள்.. சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள்.. ஐஸ்வர்யா ராய் ஓபன் டாக்
மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களுக்கு விவாகரத்து என்று தொடர்ந்து தகவல் பரவிய சூழலில் அதனை திட்டவட்டமாக மறுத்தார்கள் இரண்டு பேரும். இதனால் அவர்களது ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ஐஸ்வர்யா ராய் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் பிஸியானார். மேலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தையும் அடைந்துவிட்டார் அவர்.நடனம், கவர்ச்சி, நடிப்பு, அழகு என அத்தனையும் ஒருங்கே பெற்ற நடிகைகளில் ஒருவர் என்கிற பெயரையும் அவர் எடுத்தார்.
தமிழில் தலை காட்டிய ஐஸ்வர்யா: ஹிந்தியில் பிஸியாக இருந்த அவர்; தமிழில் தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே நடித்தார். அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1, 2 ஆகிய படங்கள் அடங்கும். இவற்றில் அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று; ஐஸ்வர்யாவுக்கும் ஹிட்டுகளை கொடுத்தது. மேலும் அவர் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

அபிஷேக்குடன் திருமணம்: இதற்கிடையே அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு நடித்துவருவது அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் அவரும், அபிஷேக்கும் இணைந்து நடிக்கலாம் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ராயின் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ஹீரோவுடன் நெருக்கமாக இருப்பது, முத்தக் காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாகவே நான் பல படங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறேன். ஒருகட்டத்தில் திரைத்துறையில் இது சகஜம் என்று தெரியவந்தது. எனவே அதுபோன்ற காட்சிகளில் நடிக்கலாம் என்று முடிவு செய்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன்.
வக்கீல் நோட்டீஸ்: அந்த முடிவில்தான் தூம் 2 படத்தில் கிருத்திக் ரோஷனுடன் முத்தக் காட்சியில் நடித்திருந்தேன். ஆனால் அந்தக் காட்சியில் நடித்ததற்காக எனக்கு இரண்டு வக்கீல் நோட்டீஸ்கள் வந்தன. அதில், 'உங்களை எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்கள் அனைவருக்குமே உத்வேகம் அளிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறீர்கள். எங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் திரைத்துறையில் மற்றவர்கள் செல்லும் வழியையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் அப்படி முத்தக் காட்சியில் நடிப்பதற்கான அவசியம் என்ன வந்தது?. ஏன் இப்படி செய்தீர்கள்? என கேள்வி கேட்டிருந்தார்கள். அதனைப் பார்த்து எனக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியானது. திரையில் மூன்று மணி நேரம் வரும் ஒரு கேரக்டரை மக்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டார்களே என்று தோன்றியது" என்றார்.


Click it and Unblock the Notifications











