அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. தனுஷ்தான் முழு காரணம்.. உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2004ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கை கடந்த வருடம் விவாகரத்தில் முடிந்தது. இந்தச் சூழலில் தனுஷ் குறித்து ஐஸ்வர்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்தார். காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டுவதற்காக முதன்முதலில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரது காதலுக்கும் சம்மதம் தெரிவிக்க ரஜினியும், அவரது மனைவியும் முதலில் தயக்கம் காட்டினார்கள். ஆனால் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணத்துக்கு ஓகே சொன்னார்கள்.

throwback stories dhanush aishwarya

2004ல் திருமணம்: இரண்டு பேருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆச்சரியம்தான் பட்டது. ஏனெனில் அந்த சமயத்தில் தனுஷ் இப்போது இருக்கும் அளவுக்கு அவ்வளவு ஃபேமஸ் கிடையாது. மேலும் சீனியர் நடிகர்களேகூட தனுஷுக்கு வந்த வாழ்வா இது என்று பேசினார்கள் என சில சீனியர் பத்திரிகையாளர்களும் சொல்வதுண்டு. இரண்டு பேருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.

சுமூகமான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்தினார்கள். ஒருவருக்கொருவர் துணையாகவும் இருந்தார்கள். ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமான 3 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். அதேபோல் இரண்டாவதாக அவர் இயக்கிய வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். அதேபோல் தனுஷின் மேனரிச மாற்றங்களுக்கும் ஐஸ்வர்யா ரொம்பவே பக்கபலமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: சூழல் இப்படி இருக்க இருவருக்கும் ஏதோ சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனையடுத்து தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். ஆனால் விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். எனவே இரண்டு பேரும் கண்டிப்பாக இணைந்துவிடுவார்கள் என்றே கருதப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த வருடம் நீதிமன்றம் சென்று பரஸ்பரமாக பிரிந்தார்கள். இருவரது பிரிவும் கோலிவுட்டில் ஷாக்கை கொடுத்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா கொடுத்திருந்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஐஸ்வர்யாவின் பேட்டி: சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "அனிருத் எனது உறவினர்தான். ஆனால் அவர் சினிமாவுக்கு வந்ததற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முழுக்க முழுக்க அதற்கு தனுஷ்தான் காரணம். அவர்தான் அனிருத்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் நம்பியவர். அனிருத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கத்தான் அவரது வீட்டில் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் தனுஷ்தான் அவர்களிடம் சென்று இல்லை அனிக்கு திறமை இருக்கிறது. அவரை இசையமைப்பாளராக்கலாம் என்று சொன்னார். மேலும் என்னிடம் வந்து 3 படத்தில் அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என்றும் கூறினார். அதனால் அனிருத் சினிமாவுக்குள் வந்ததற்கான எல்லா க்ரெடிட்டுகளும் தனுஷுக்குதான் சேரும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X