Ajith: பாதி ஷூட்டிங் முடிந்ததும் அஜித் எடுத்த தவறான முடிவு... அலேக்காக தட்டித் தூக்கிய மாஸ் ஹீரோ!

சென்னை: அஜித் - சரண் கூட்டணியில் உருவாகவிருந்த ஏறுமுகம் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் ஆனது. ஆனால் அதே கதையை வேறொரு டைட்டிலில் நடித்து செம்ம மாஸ் காட்டினார் சீயான் விக்ரம்.

Ajith: Ajith missing the superhit Gemini film starring Vikram throwback story

அஜித் எடுத்த தவறான முடிவு
அஜித்தின் ஆரம்பகால கேரியரில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் காதல் மன்னன். 1998ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சரண். முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து மாஸ் காட்டிய சரண், ஒரே படத்தில் முன்னணி இயக்குநர் ரேஸிலும் இடம் பிடித்தார்.

காதல் மன்னன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசியிருந்த சரண், விவேக் சாருடன் சென்றதால் இரண்டே நிமிடங்களில் அஜித் சார் ஓக்கே சொன்னார். கதை கூட கேட்காமல் நடித்ததாக சரண் பேசியிருந்தார். காதல் மன்னன் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணியில் அமர்க்களம் வெளியானது. அஜித் - ஷாலினி நடித்த இந்தப் படமும் செம்ம மாஸ் ஹிட் அடித்தது.

இதனால் அஜித் - இயக்குநர் சரண் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தான் மூன்றாவது முறையாக ஏறுமுகம் என்ற படத்தில் இக்கூட்டணி இணைந்தது. 2001 மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் 40 சதவீதம் முடிந்த நிலையில், அஜித் திடீரென விலகினார். கதையில் திருப்தி இல்லாததால் ஏறுமுகம் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து அதே கதையை விக்ரமிடம் கூறிய சரண், டைட்டிலை ஜெமினி என மாற்றி இயக்கினார். இதில் விக்ரம் உடன் கிரண், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்தனர். 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இதனால் இந்தப் படத்தை மிஸ் செய்ததை நினைத்து அஜித் ரொம்பவே வேதனையடைந்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் சரணுடன் இணைந்தார் அஜித்.

அப்படி அஜித் - சரண் கூட்டணியில் அடுத்து உருவான அட்டகாசம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் ஜெமினி படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த விக்ரம், அவரது கேரியரில் அடுத்த லெவலுக்கு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X