Ajith: ”நான் எங்க போனாலும் அப்படித்தான்..” வைப் கொடுத்த அஜித்... ரசிகர்கள் கொண்டாட இதுதான் காரணமா!!
zசென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள விடாமுயற்சி ஷூட்டிங் இந்த வாரம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் உற்சாகமாக உள்ள அஜித் ரசிகர்கள், அவரது பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.
அந்தப் பேட்டியில் தனது சிம்பிளிசிட்டி பற்றி அஜித் ஓபனாக பேசியுள்ளதோடு, நான் எப்போதுமே அப்படித்தான் எனவும் வைப் கொடுத்துள்ளார்.

ரசிகர்களுக்கு வைப் கொடுத்த அஜித்: ரஜினி, கமல், விஜய் வரிசையில் கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜித். எந்தவித சினிமா பின்னணியும் சப்போர்ட்டும் இல்லாமல் திரையுலகில் சாதித்து வரும் அஜித்தை, தன்னம்பிக்கை நாயகன் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காதல், நட்பு, ஹீரோ, வில்லன், மாஸ், கேங்ஸ்டர் என அஜித் நடிக்காத ஜானர்களே இல்லை எனலாம்.
கடந்த பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங், இந்த வாரம் தொடங்குவதாக சொல்லப்படுகிறது. இதற்காக படக்குழுவினருடன் அஜித்தும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளாராம். இதனையடுத்து விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக டிவிட்டரில் அஜித், விடாமுயற்சி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில், அஜித்தின் பேட்டியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சினிமா ஷூட்டிங் முதல் பொது இடங்கள் என எங்கு சென்றாலும் மிக எளிமையாக இருப்பதே அஜித்தின் வழக்கம். தேவையில்லாமல் தன்னைத் தானே பூஸ்ட்அப் செய்துகொள்ளாமல் சிம்பிளாக கடந்துசென்று விடுவார்.
தான் நடிக்கும் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல், மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கிவிடும் அஜித், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில் தயங்குவதே கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இதனால் அஜித்தின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் அவர் எப்போதும் ட்ரெண்டிங்கிலேயே இருக்கிறார்.
இந்நிலையில், "நான் எவ்வளவு பெரிய உயரம் சென்றாலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நானாகவே இருப்பேன். எனக்கு எல்லாரிடமும் எளிமையாக பேசுவதும் பழகுவதும் தான் ரொம்ப புடிக்கும். அப்படி இருந்தால் நம்மால் பத்து பேர் உற்சாகமா இருப்பாங்க. அதுதான் எனது பழக்கம், இதை எப்போதும் மாற்றிக்கவே மாட்டேன்" என அஜித் பேசியுள்ளார்.
இது அஜித்தின் த்ரோபேக் பேட்டியாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, அஜித்தின் இந்த த்ரோபேக் பேட்டி பாசிட்டிவ் வைப் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











