Ajith: ”அஜித் அப்படி நினைக்கல... ஒரே செக்ல செட்டில்மெண்ட் பண்ணார்..” அந்த மனசு தான் சார் கடவுள்!!
சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் உதவும் குணம் குறித்து சினிமா செய்தியாளர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரே செக்கில் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னிடம் வேலைக்கு சேர்ந்ததை நம்பி வீடு வாங்கிய டிரைவர், இப்போது நம்மால் நடுத் தெருவில் நின்றுவிடக் கூடாது என பெரிய மனதுடன் நடந்துகொண்டார். இது வேறு எந்த நடிகரும் செய்யத் துணியாத காரியம் என பிரபல செய்தியாளர் ஒருவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதேபோல், மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் அஜித்தை மிஞ்சிய ஒருவர் கோலிவுட்டில் கிடையாது என சொல்லப்படுகிறது. சக நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள், இயக்குநர்கள், சினிமா செய்தியாளர்கள், தனது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என யாராக இருந்தாலும் தேடிச் சென்று உதவி செய்வது அஜித்தின் வழக்கமாம். இப்படி ஒருமுறை தன்னிடம் டிரைவராக இருந்த ஒருவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார்.
அதாவது டிரைவராக வேலை பார்த்த ஒருவர், அஜித் பற்றி இன்னொருவரிடம் தவறாக பேசியுள்ளார். இந்த விஷயம் அஜித்துக்கு தெரிந்ததும், அந்த டிரைவருக்கு 6 மாதம் சம்பளம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பிவிட்டாராம். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் அந்த டிரைவர் குறித்து அஜித்திடம் போலீஸார் விசாரித்துள்ளனர். வீட்டுக் கடன் வாங்கிய அந்த டிரைவர் சரியாக லோன் கட்டவில்லை எனவும், அதுபற்றி விசாரிக்க அழைத்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
அஜித் சாரிடம் வேலை பார்த்ததாகவும், அவர் வேலையை விட்டு அனுப்பிவிட்டதால் லோன் கட்ட முடியவில்லை எனவும் அந்த டிரைவர் கூறியுள்ளார். இதனையறிந்த அஜித், பேலன்ஸ் இருந்த லோன் தொகை எவ்வளவு என விசாரித்துள்ளார். அதில் 7 லட்சம் எனத் தெரியவர, உடனே ஒரே செக்கில் அந்த டிரைவரின் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொடுத்துள்ளார்.
தன்னிடம் வேலைக்கு சேர்ந்ததை நம்பி வீடு வாங்கிய டிரைவர், இப்போது நம்மாள் நடுத் தெருவில் நின்றுவிடக் கூடாது என பெரிய மனதுடன் நடந்துகொண்டார். இது வேறு எந்த நடிகரும் செய்யத் துணியாத காரியம் என பிரபல செய்தியாளர் ஒருவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











