Ajith: ஹரி காம்போவில் அஜித் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் மூவி... சைலண்டாக தட்டித் தூக்கிய விக்ரம்!
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது ஒரு சூப்பர் ஹிட் படத்தை அவர் மிஸ் செய்துள்ளார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட விக்ரம், அஜித் நோ சொன்ன படத்தில் நடித்து உச்சம் சென்றுள்ளார்.
அஜித்துக்குப் பதிலாக சீனில் வந்த விக்ரம்: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் அஜித்தின் 62வது படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டிலும் கன்ஃபார்ம் ஆகிவிட்டது.
ஆனாலும், விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்காததால், இந்தப் படம் ட்ராப் ஆகிவிடுமோ என அஜித் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல், அஜித் கமிட்டான ஒரு படம் சீயான் விக்ரமின் கைகளுக்கு சென்ற சம்பவம் 2003ம் ஆண்டு நடந்துள்ளது. 2000ம் ஆண்டு முதல் அஜித் கேரியரில் முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகின.
அஜித்துக்கு மிகப் பெரிய சக்சஸ் கொடுத்த இந்தப் படங்கள் வரிசையில், இயக்குநர் ஹரியின் சாமியும் இடம்பெற வேண்டியதாம். அதாவது கமர்சியல் படங்கள் எக்ஸ்பர்ட்டான ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சாமி. 2003ல் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சீயான் விக்ரம், த்ரிஷா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் அஜித் தான் நடித்திருக்க வேண்டுமாம். சாமி படத்தின் கதையை இயக்குநர் ஹரி முதலில் அஜித்திடம் கூறியுள்ளார். அவரும் ஹரியின் முந்தைய படங்கள் ஹிட் அடித்ததால், சாமி-இல் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தாராம். ஆனால் திடீரென அஜித்தால் சாமி படத்தில் நடிக்க முடியாமல் போனதால், கடைசி நேரத்தில் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் தான் சீயான் விக்ரமிடம் சென்றுள்ளார் ஹரி. அப்போது தில், தூள் என கமர்சியல் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம், சாமி பட கதையை கேட்டதும் உடனே ஓக்கே சொல்லிவிட்டாராம். அதன்பின்னர் படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்க, விக்ரமின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது. அதேநேரம் அஜித்துக்காக எழுதிய சாமி கதையை, விக்ரம் நடித்ததால் சில மாற்றங்கள் செய்து அதன் பின்னர் இயக்கியுள்ளார் ஹரி.


Click it and Unblock the Notifications











