Ajith: "அஜித்துக்காக அந்தப் பாட்டுக் கொடுத்தேன்... இந்தா! இப்ப நம்பர் 1 ஹீரோ”: மனம் உருகிய தேவா
சென்னை: நடிகர் அஜித் குறித்து இசையமைப்பாளர் தேவா பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அஜித் இன்று நம்பர் ஒன் ஹீரோ எனக் கூறியுள்ள தேவா, அதற்கான காரணத்தையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேவாவும் அதன் பின்னணியில் அஜித்தின் வெற்றியை பாராட்டியுள்ளார். அதற்கு காரணமாக தேவா இசையமைத்த பாடல் பற்றியும் அவர் உருக்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் இப்போ நம்பர் 1 ஹீரோ : எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். ஆரம்பத்தில் பல தோல்விப் படங்களில் நடித்த அஜித், காதல் கோட்டை, ஆசை, வாலி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். அஜித்தின் ஆரம்ப காலங்களில் அவருக்கு நல்ல அடையாளம் கொடுத்த படங்களுக்கு தேவா தான் இசையமைத்திருந்தார். அந்த வகையில் அஜித்தின் வளர்ச்சிக்கு தேனிசைத் தென்றல் தேவாவும் முக்கியமானவர் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் தேவா கொடுத்த ஒரு பேட்டியில், அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. விடாமுயற்சி அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அஜித் குறித்து தேவா பேசியது வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில், அஜித் குறித்து தேவா சூப்பரான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது அஜித்தின் வான்மதி படத்திற்கு தேவா தான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையார்பட்டி ஹீரோ' என்ற பாடல் உருவானதை வைத்து தேவா பேசியுள்ளார். அந்தப் பாடலில் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா... நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா" என தொடங்கும்.
அதனை குறிப்பிட்டுள்ள தேவா, பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா... நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா' என ரைம்மிங்காக அந்த வரியை வைத்தோம். அப்படி வச்ச நேரம் அஜித் இப்போ நம்பர் 1 ஹீரோ என தேவா உருக்கமாக கூறியுள்ளார். சாய் வித் சித்ரா யூடியூப் தளத்துக்காக தேவா கொடுத்த பேட்டியில் தான், அவர் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித் குறித்து தேவா பேசிய இந்த வீடியோவை ஏகே ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அஜித் எப்போதுமே நம்பர் 1 ஹீரோ தான் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். விரைவில் விடாமுயற்சி அப்டேட் வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த வீடியோ இப்போதைக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











