Ajith: அஜித்துடன் படம் பண்ண கூடாதுன்னு நினைச்சேன்... எல்லாம் என் நேரம்... உண்மையை சொன்ன பிரபலம்
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படம் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், ஜி படத்தை இயக்கிய லிங்குசாமி அஜித்துடன் பணிபுரிந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

ஜி படத்தில் அஜித் வந்தது இப்படித்தான்: ஆனந்தம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த லிங்குசாமி, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருந்தார். இந்தப் படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய ரன் படமும் சூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து அஜித்துடன் இணைந்த லிங்குசாமி 'ஜி என்ற படத்தை இயக்கினார். அஜித்துடன் த்ரிஷா, சரண்ராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்த ஜி பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியிருந்தது. அஜித்தின் முதல் அரசியல் படமும் ஜி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜி படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அஜித் கேரியரில் மிக மோசமான படமாக அமைந்த ஜி குறித்து இயக்குநர் லிங்குசாமி மனம் திறந்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துக்குப் பதிலாக முதலில் சித்தார்த்தை தான் செலக்ட் செய்திருந்தாராம் லிங்குசாமி. ஆனால், சித்தார்த் நடிக்க மறுத்துவிட்டதால் அஜித்திடம் சென்றுள்ளார். ஆனால் அஜித் அந்த கேரக்டர் பண்ணக்கூடாது என நினைத்து தான் லிங்குசாமி சென்றாராம்.

கடைசியில் வேறுவழியே இல்லாமல் காலம் அஜித்துடன் படம் பண்ண வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது என கூறியுள்ளார் லிங்குசாமி. ஜி படத்தில் காலேஜ் ஸ்டூடண்டாக அஜித் நடித்திருப்பார். இந்த கேரக்டர் தனக்கு செட்டாகாது என்பது அஜித்துக்கும் தெரியும், அதனால் அவர் படப்பிடிப்புக்கு முந்தைய நாளில்தான் கதை கேட்டார். அப்போதும் இந்தப் படம் சரியா வராது என ஓபனாகவே தன்னிடம் கூறிவிட்டார். மேலும் வேறு ஏதும் கதை இருக்கிறதா என்றும் கேட்டதாக லிங்குசாமி கூறியுள்ளார்.
இறுதியாக ஜி படம் வெளியான போது அஜித்தும் லிங்குசாமியும் நினைத்தது போல ரசிகர்களிடம் வரவேற்பே பெறவில்லை. அதேநேரம் லிங்குசாமி இயக்கி அதே ஆண்டில் வெளியான சண்டகோழி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. விஷாலுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த படமாகவும் சண்டக்கோழி அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











