Ajith: 100 கோடி வாங்கியும் அஜித் மாறவே இல்லை... ஆனால் அந்த விசயத்துல... எதிர்நீச்சல் மாரிமுத்து ஓபன்

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து அஜித் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.

அஜித்தின் சம்பளம் முதல் அவரது உதவும் குணம் வரை எல்லாவற்றையும் ஓபனாக பேசியுள்ளார் மாரிமுத்து.

 Ajith: Ethirneechal serial actor Marimuthu has opened up about Ajiths helpfulness

அஜித் மாறவே இல்லை: அஜித்தின் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதனிடையே அஜித்தின் தந்தை சுப்ரமணியம் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஜித் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் உடையவர். ஆனால், தான் செய்யும் எந்த உதவியும் வெளியே தெரியாதவாறு சீக்ரெட்டாக வைத்துக்கொள்வார். சில வருடங்களுக்குப் பிறகு தனது வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்தமக வீடு கட்டிக் கொடுத்து நெகிழ வைத்திருந்தார். இதுபோல அவரால் உதவிப் பெற்றவர்கள் பலரும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களை கூறியுள்ளனர்.

 Ajith: Ethirneechal serial actor Marimuthu has opened up about Ajiths helpfulness

அஜித்தின் இந்த உதவும் பண்பு குறித்து இயக்குநரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பரியேறும் பெருமாள் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள மாரிமுத்து, அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில், அஜித் பற்றிய பேசிய அவர், சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு வைக்க தெரியாத நடிகர் அஜித். மேலும் அதிகமாக உதவிகள் செய்துகொண்டே இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

அஜித்தை ஆசை படத்தில் நடிக்கும் போது முன்பிருந்தே நடிகர் மாரிமுத்துக்கு தெரியுமாம். அப்போது வெறும் 25 ஆயிரம் சம்பளம் வாங்கினார். ஆனால், இப்போது 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், இருந்தாலும் அன்றைக்கும் இன்றைக்கும் அஜித்திடம் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வளவு சம்பளம் வாங்கும் அவர், இந்த பணத்தை சேமித்து வைக்கவோ அல்லது மறைத்து வைக்கவோ நினைத்ததே கிடையாது.

 Ajith: Ethirneechal serial actor Marimuthu has opened up about Ajiths helpfulness

தன்னுடன் இருக்குறவங்க யாரா இருந்தாலும், அவர்கள் மீது அதிகமான கேர் எடுத்துக்கொள்ளும் பறந்த மனம் படைத்தவர் தான் அஜித். இதெல்லாம் ஷாலினியை திருமணம் செய்த பின்னரும் கூட அவர் மாற்றிக்கவே இல்லை என்றுள்ளார் மாரிமுத்து. அதேபோல், ஷாலினியே இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என சொன்னால் கூட அஜித் அதனை கேட்க மட்டார், ஏனென்றால் அவரது குணம் அப்படி என மாரிமுத்து கூறியுள்ளார். அஜித்தின் ஆசை, வாலி போன்ற படங்களில் மாரிமுத்துவும் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X