ரேஸுக்கு போகவே மாட்டேன்.. அஜித்தை அட்டாக் செய்தாரா கமல்ஹாசன்?.. எந்தப் பந்தயத்தை கூறுகிறார்?

சென்னை: கமல்ஹாசன் இப்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிச்சயமாக இப்படம் நாயகன் போன்ற ஒரு படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா பாடலில் கமல், சிம்புவின் நடனமும் ரசிக்கும்படியாகவே இருந்தது.

இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர் கமல்ஹாசன் என்று பலரும் சொல்வார்கள். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வேறு சில துறைகளிலும் இருந்திருக்கிறார். அதனையடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கமலை ஹீரோவாக அறிமுகமாக்க; குறுகிய காலத்திலேயே முன்னணி மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுவிட்டார். அந்த வயதிலேயே எக்ஸ்பெரிமென்ட்டல் கதைகளை தேர்வு செய்து நடித்து தனி முத்திரை பதித்தார்.

கமலின் இன்னொரு முகம்: வளர வளர இவரது மேஜும் எங்கேயோ சென்றது. ஒருகட்டத்தில் அவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை சினிமாவில் என்ற பிம்பமும் உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவர் அரசியல் பிரவேசம் செய்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பை அரசியல் அவருக்கு கொடுக்கவில்லை. இப்போதும் அரசியலில் இயங்கிவந்தாலும் சினிமாவிலும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

Ajith fans Trolled with a throwback interview given by Kamal Haasan

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி தனது செகண்ட் இன்னிங்ஸை லோகேஷ் கனகராஜோடு தொடங்கினார் அவர். விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமலையும் அதே எனர்ஜியோடு ரசிகர்கள் பார்த்தார்கள். உலக அளவில் 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. இது உற்சாகம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டானார். அப்படி அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான கிண்டல்களையும் சந்தித்தது.

மணியுடன் கூட்டணி: தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே மணி - கமல் க்ளாசிக் கூட்டணி என்ற பெயர் இருப்பதும்; கமலுடன் சிம்பு வைத்திருக்கும் கூட்டணி முதன்முறை என்பதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் கமலுடைய ரசிகர்களிடம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா என்ற சிங்கிள் பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. அதில் கமலும், சிம்புவும் அட்டகாசமாக நடனமாடியிருந்தனர்.

கமலின் த்ரோபேக் பேட்டி: இந்நிலையில் தக் லைஃப் ஜூன் மாதம் ரிலீஸாகவிருப்பதால் இப்போது கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் உலாவிவருகிறது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய அவர், "சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை வெளியே சொல்லாத விஷயத்தை சொல்கிறேன். வாழ்க்கையில் நான் சீட்டு விளையாடியது கிடையாது, லாட்டரி சீட்டு வாங்கியதில்லை, ரேஸுக்கு போனதே கிடையாது. அப்பா நிறைய லாட்டரி வாங்குவார், சாருஹாசன் சீட்டு விளையாடுவார். ஆனால் அதை யாரும் செய்யக்கூடாது என்று என்னிடம் சொன்னது கிடையாது. எனக்கு ஆரம்பத்திலிருந்தே அதன் மீதெல்லாம் ஆர்வம் இல்லை" என்றார்.

அஜித் மீது அட்டாக்கா?: இந்த வீடியோ ஒருபக்கம் ட்ரெண்டானாலும் இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களை சிலர் இதில் இழுத்துவிடுகின்றனர். அதாவது, ரேஸுக்கு போனதே கிடையாது என்று கமல் ஹாசன் சொல்வதை பார்த்தால் கார் ரேஸையும் சேர்த்து சொல்கிறாரோ; அஜித்தும் இதில் சம்பந்தப்படுகிறாரோ என்று கூறிவருகின்றனர். அதற்கு ஏகே ரசிகர்களோ, அவர் சொன்னது குதிரை ரோஸ் போன்றவற்றை. கார் ரேஸை அல்ல; வேண்டுமென்றே சிலர் இப்படி பேசிவருகிறார்கள் என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X