விஜய்யை புகழ்ந்து தள்ளிய அஜித்குமார்.. எதற்காக தெரியுமா?.. எஸ்.ஏ.சி சொன்ன சீக்ரெட்
சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யை அஜித் பாராட்டிய சம்பவம் குறித்து இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
இப்போதைய படங்கள்: அஜித் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்துவருகிறார். அதேபோல் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும்; அதுதான் அவரது கடைசி படம் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மங்காத்தா படத்தில் அர்ஜுன் கேரக்டரை தன்னிடம் கூறியிருந்தால் அதில் தானே நடித்திருப்பேன் என விஜய்யும் தெரிவித்திருக்கிறார்.
பாராட்டிய அஜித்: இந்நிலையில் விஜய்யை அஜித் பாராட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த படம் தலைவா. ஒரு டேக் லைனால் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்த அந்தப் படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இந்தப் பாடலை ஒருமுறை அஜித்திடம் ஏ.எல்.விஜய் போட்டுக்காட்டினாராம். அதனை கேட்டுவிட்டு, 'பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது. விஜய் ஒரு Professional பாடகர் போல் இந்தப் பாடலை சிறப்பாக பாடியிருக்கிறார்' என்று பாராட்டினாராம் அஜித். இதனை ஏ.எல்.விஜய் தன்னிடம் சொன்னதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











