பண கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை.. அது வேண்டாம்.. 1 கோடி ரூபாயை தூக்கி எறிந்த அஜித்
சென்னை: நடிகர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித்குமார். அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கின் ஷெட்யூல் முடிந்துவிட்டது. மேலும் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார் அவர். இந்தச் சூழலில் அஜித் பற்றி சுவாரஸ்யமான சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அவர் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் வெற்றியும், தோல்வியும் சரி பாதியாக இருப்பவை. இருப்பினும் தன்னம்பிக்கையை விடாத அவர் தொடர்ந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நடிப்புக்கு மட்டுமின்றி அவரின் விடாமுயற்சிக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித். பல சோதனைகளுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. மேலும் படத்திலிருந்து அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. அஜர்பைஜானில் கிட்டத்தட்ட 80 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. மீதம் இருக்கும் ஷூட்டிங்கை சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி பட வேலைகள் ஒருபக்கம் நடக்க; மறுபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும்; அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஒரு கோடி ரூபாயை வேண்டாம் என்ற அஜித்: இந்நிலையில் பண கஷ்டத்தில் இருந்தபோதும் தன்னை தேடி வந்த ஒரு கோடி ரூபாயை வேண்டாம் என அஜித் சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமுறை பெப்சி விளம்பரத்தில் நடிக்குமாறு அஜித்துக்கு ஆஃபர் வந்ததாம். அதில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் அஜித் கடுமையான பண கஷ்டத்திலும் இருந்தாராம். இருந்தாலும் தான் பெப்சி விளம்பரத்தில் நடித்தால் அதை பார்த்து ரசிகர்களும் பெப்சியை குடிப்பார்கள் என்று முடிவெடுத்து தன்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனை பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











