Ajith Sivakarthikeyan: அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சென்னை: அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ திடீரென வைரலாகி வருகிறது. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் அவரது 21வது படத்தில் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போட்டோ வெளியாகி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்துள்ளது.

அஜித்துடன் சிவகார்த்திகேயன்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் அஜித்தும் மிக முக்கியமானவர். தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இதுவரை அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் நடக்கவுள்ளதாம்.

 Ajith Sivakarthikeyan: Ajith and Sivakarthikeyan from Aegan movie throwback photo is trending

இந்த நிலையில் தான் அஜித்துடன் சிவகார்த்திகேயன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் வில்லேஜ் சப்ஜெக்ட் போன்ற மினிமம் பட்ஜெட் படங்களில் நடித்து வந்தவர், இப்போது ஆக்‌ஷன் ஹீரோவாக மாஸ் காட்டுகிறார்.

சிவகார்த்திகேயன் தனது கேரியரில் முன்னணியில் வந்து கொண்டிருந்த நேரம், அவரை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டினார் அஜித். அதுபற்றி சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்டது உண்டு. இந்நிலையில் அஜித்துடன் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளது கோலிவுட் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்டான லுக்கில் அஜித் வர, அவருக்கு எதிரே கை நிறைய புத்தகங்களை சுமந்துகொண்டு நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த போட்டோவில் காலேஜ் ஸ்டூடண்ட் லுக்கில் சிவகார்த்திகேயனும், ப்ரொபஸர் கெட்டப்பில் அஜித்தும் மாஸ் காட்டுகின்றனர். இது அஜித்தின் ஏகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், நயன்தாரா நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏகன். ராஜூ சுந்தரம் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. ஆனால், இதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அப்படி அஜித்துடன் ஒரு காட்சியிலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த அந்த சீன் எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படம் மட்டும் எப்படியோ வெளியாக, அது இப்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் இனி விஜய்க்குப் பதிலாக சிவகார்த்திகேயன் தான் அஜித்துக்குப் போட்டி என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X