விஜய்யின் போக்கிரி.. கலாய்த்த லொள்ளு சபா டீம்.. சந்தானத்திடம் அஜித் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருவருக்கும்தான் போட்டி நிலவிவருகிறது. விஜய் கடைசியாக GOAT படத்திலும், அஜித் குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருந்தார்கள். ஜன நாயகன் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் படத்தை லொள்ளு சபா டீம் கலாய்த்தது குறித்து சந்தானத்திடம் அஜித் பேசிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல் ஹாசன் என்ற வரிசையில் இருக்கிறார்கள் அஜித்தும். இரண்டு பேருக்குமே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இருவரது படம் வெளியானால் அன்றைய தினம் திருவிழாதான். அதுவும் அவர்களின் படம் ஒரே நாளில் ரிலீஸானால் சொல்லவே வேண்டாம். கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவும், வாரிசு படமும் ரிலீஸானது கவனிக்கத்தக்கது.
சேர்ந்து நடித்த விஜய், அஜித்: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.

நேருக்கு நேரில் மோதல்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து ஏகே விலகிவிட்டார்.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. இரண்டு பேரும் இப்போதைக்கு கோலிவுட்டின் டாப் இடங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
லொள்ளு சபா செய்தது: இந்நிலையில் லொள்ளு சபா மூலம் பிரபலமாகி சினிமாக்களில் நடித்த நடிகர் ஜீவா பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "கிரீடம் படத்தை கலாய்த்து லொள்ளு சபாவில் ஒரு எபிசோட் ரிலீஸ் செய்தோம். அந்த எபிசோட் டெலிகாஸ்ட் ஆனபோது குருவி படத்தில் விஜய்யுடன் நடித்தேன். அந்த கிரீடம் எபிசோடை விஜய் பார்த்துவிட்டு, 'நேற்று கிரீடம் எபிசோடை பார்த்தேன். எப்படி அவரை மாதிரியே குரல், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் பிடிக்கிற; உனக்கு யார் மாதிரி செய்வது ஈஸி என்று கேட்டார். அதற்கு நானோ, உங்களை மாதிரிதான் என சொன்னதும்; ஷாட் ரெடியாகிடுச்சு ப்பா என்று சொல்லி சென்றுவிட்டார்.
அஜித் சொன்னது: அதேபோல் போக்கிரி படம் தொடர்பாக ஒரு எபிசோடு டெலிகாஸ்ட் ஆனது. அது டெலிகாஸ்ட் ஆனபோது கிரீடம் படத்தில் அஜித்துடன் சந்தானம் நடித்துக்கொண்டிருந்தார். அந்த எபிசோடை பார்த்த அஜித்தோ சந்தானத்திடம், 'என்னடா உங்க லொள்ளு சபா டீம் போக்கிரி படத்தை இப்படி கலாய்த்துவிட்டார்களே' என கேட்டிருக்கிறார். உடனே சந்தானம் எனக்கு ஃபோன் செய்து, இந்த வாரம் என்ன பண்ணி வெச்சிருந்தீங்கனு கேட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











