கமல்ஹாசன்னு சொல்லாதீங்க.. கமல் சார்னு சொல்லுங்க.. ரசிகையை திருத்திய அஜித்.. இவ்வளவு மரியாதையா?
சென்னை: கமல்ஹாசன் மீது இந்திய திரைத்துறையில் அனைத்து நடிகர்களுக்குமே மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. பலமுறை அதனை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேசமயம் அஜித்தை பொறுத்தவரை அவர் ரஜினி மேல்தான் பெரிய மரியாதையை வைத்திருக்கிறார் என்று பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய திரையுலகின் மூத்த மற்றும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக செய்துவிட்டு போகும் அவர் சிறு வயதிலிருந்தே நடித்துவருகிறார்.230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட அவர் கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார். படமானது படுதோல்வியை சந்தித்தது. தோல்வி என்பது மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் அந்தப் படம் உள்ளானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: கமல் அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர்கள் இயக்கப்போகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களில் சந்தித்த தோல்விக்கு இந்தப் படத்தின் மூலம் தரமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் இருக்கிறார். அவரது ரசிகர்களும் அதனைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பெரிய மரியாதை: இதற்கிடையே கமல் எத்தனை படங்கள் தோல்வி கொடுத்தாலும் அவர் சினிமாவில் செய்த விஷயங்களுக்காகவே அவருக்கு காலம் முழுவதும் மரியாதை கொடுக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் அத்தனை நடிகர்களுமே கமல் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதனை பலமுறை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அஜித் பொதுவாக இந்த மாதிரி விஷயங்களை வெளியே காண்பித்துக்கொள்ளமாட்டார்.
ரஜினி மீது மட்டுமா?: அதன் காரணமாக அஜித்துக்கு கமலைவிடவும் ரஜினியைத்தான் பிடிக்கும் அதனால்தான் ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் ஏகே நடித்தார். அது மட்டுமின்றி பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவிலும் அதன் காரணமாகத்தான் அஜித்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இருந்தார் என்றும் அவ்வப்போது குரல்கள் கேட்கும். இந்நிலையில் அஜித் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது பில்லா பட ரிலீஸின்போது நடிகர் சந்தானத்துக்கு பேட்டி கொடுத்தார் அஜித். அப்போது ரசிகை ஒருவர், 'மிஸ்டர் கமல்ஹாசன்' என்று சொல்லி தனது கேள்வியை அஜித்திடம் தொடங்கினார். அதற்கு அஜித்தோ, 'மிஸ்டர் கமல்ஹாசனா?.. கமல் சார் என்று சொல்லுங்கள்' என சொல்ல உடனே அவரும் மாற்றிக்கொண்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமல் மீது அஜித்துக்கு எவ்வளவு பெரிய மரியாதை இருந்தால் இப்படி சொல்லியிருப்பார் என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











