Ajith - என் படம் வேண்டாம்.. பிரதர் விஜய் படத்தை போடுங்க.. இயக்குநருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்
சென்னை: விஜய்யும் அஜித்தும் கிட்டத்தட்ட ஒரேகாலக்கட்டத்தில் நடிக்க வந்தவர்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் மட்டும் இணைந்து நடித்த அவர்கள் அதற்கு பிறகு நடிக்கவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது திறமையின் துணையால் வளர்ந்துவிட விஜய் vs அஜித் என்ற நிலைதான் கடந்த பல வருடங்களாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பார்க்கலாம்.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்களில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.
நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சம்பள விவகாரத்தில் அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் முட்டிக்கொண்டதாகவும் அதனால்தான் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.
அஜித் Vs விஜய்:அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பிரதர் விஜய் படத்தை போடுங்க: மேலும் மங்காத்தா மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடந்தபோதுகூட அஜித்துக்கு விஜய் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார். அஜித் பிரியாணி சமைத்து போட்டார். இப்படி இருவருக்குமான நட்பை மங்காத்தா படம்தான் ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தில் நடந்த இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
அதாவது மங்காத்தா படத்தின் ஒரு காட்சியில் திரையரங்கில் ஏதேனும் ஒரு படத்தின் காட்சி ஓடிக்கொண்டிருப்பது போல் சீன். அந்த சீனில் எந்த படத்தின் காட்சியை வைக்கலாம் என வெங்கட் பிரபுவுக்கு ஒரே குழப்பமாம். அதை அஜித்திடமும் கேட்டு பேசாமல் உங்கள் படத்தின் சீன் ஏதாவது ஒன்றை வைத்துவிடலாமா என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த அஜித்தோ, இல்லை நான் நடிக்கும் படத்தில் நான் ஏற்கனவே நடித்த படத்தின் காட்சியை வைத்தால் நன்றாக இருக்காது. பேசாமல் நம்ம பிரதர் விஜய்யின் பட காட்சியை வைத்துவிடுங்களேன் என சொன்னதை அடுத்து; அந்த சீனில் விஜய் நடித்த காவலன் பட காட்சியை வைத்தார்களாம். அதேபோல் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஒரு காட்சியில், விளையாடு மங்காத்தா பாடல் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











