Vijay And Ajith - வெங்கட் பிரபு படத்தில் விஜய் நடிப்பது அஜித்தின் ஐடியாவா?.. ஓஹோ இது அப்போவே போட்ட பிளானா?.
சென்னை: Vijay And Ajith (விஜய் மற்றும் அஜித்) வெங்கட் பிரபு குறித்து விஜய்யிடம் அஜித் சொன்ன விஷயம் தெரியவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
விஜய்யும் அஜித்தும் இப்போது இருக்கும் இடம் அவர்களுக்கு லேசாக கிடைத்துவிடவில்லை. கடுமையாக உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது உச்ச இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.

நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற அவர் பாதியில் வெளியேறிவிட்டார். சம்பள விஷயத்தில் சுஹாசினிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்தான் அவர் வெளியேற காரணம் என கூறப்படுகிறது.
விஜய் Vs அஜித்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிக்ர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.
நண்பர்கள்: இரண்டு பேரும் திரையில் எதிர் எதிர் துருவங்களாக கட்டமைக்கப்பட்டாலும் நிஜத்தில் சிறந்த நண்பர்களாகவே இருக்கின்றனர் என திரையுலகைச் சேர்ந்த பலர் கூறுவதுண்டு. ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களும் அதை புரிந்துகொள்ளாமல் மோதிக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் மோதிக்கொண்டவர்கள் இப்போது சமூக வலைதளங்களில் மோதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் தந்தை மறைவுக்கு விஜய் நேரில் சென்று தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். எனவே இனியாவது இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பேரின் அடுத்தடுத்த படங்கள்: விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைந்தது பலருக்கும் சர்ப்ரைஸ்தான். இந்நிலையில் வெங்கட் பிரபு குறித்து விஜய்யிடம் அஜித் கூறிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
என்ன சொன்னார்?: அதாவது விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கினார் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய் ராஜாவிடம், "இந்தப் படம் எப்படி தெரியுமா இருக்கணும்.மங்காத்தா படத்தை முடித்திருக்கிறாரே அஜித். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். விஜய் நீங்க என்னோட இயக்குநர் வெங்கட் பிரபுவை யூஸ் பண்ணிக்கோங்க.
அவர் அவ்வளவு டேலண்ட் என்றார். அதுபோல் நானும் மற்றவர்களிடம் என்னுடைய இயக்குநர் ராஜாவை யூஸ் பண்ணிக்கோங்கனு சொல்லனும். அப்படி இருக்கணும் படம்" என சொன்னாராம். இந்தத் தகவலை இயக்குநர் ராஜாவே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











