Ajith: நோ சொன்ன அஜித்... சூப்பர் ஹிட் படமாக்கிய சீயான் விக்ரம்... இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது?
சென்னை: கோலிவுட்டில் அஜித் - இயக்குநர் சரண் கூட்டணிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
காதல் மன்னன், அமர்க்களம் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் இந்தக் கூட்டணியில் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து அஜித்துக்காகவே ஒரு மாஸ்ஸான கதையை தயார் செய்துள்ளார் சரண்.
ஆனால், அந்தப் படம் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானதும் அதனைப் பார்த்து அஜித் ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளாராம்.

அஜித் இடத்தில் சீயான் விக்ரம்: 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படம் அஜித் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் மூலம் தான் சரணும் இயக்குநராக அறிமுகமானார். காதல் மன்னன் வெற்றியைத் தொடர்ந்து அமர்க்களம் படத்திலும் அஜித் - சரண் கூட்டணி இணைந்தது. 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் திரைப்படமும் அஜித்துக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
அதன்பின்னர் அஜித் செம்ம பிஸியாக வலம் வர, சரண் பார்த்தேன் ரசித்தேன் படத்தை இயக்கினார். பிரசாந்த், சிம்ரன், லைலா நடித்த இந்தப் படம் காதல் பின்னணியில் உருவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக சரண் இயக்கிய அல்லி அர்ஜுனா படம் தோல்வியைத் தழுவியது. இதனால் மீண்டும் அஜித்துடன் இணையலாம் என்ற ஆசையில் செம்ம மாஸ்ஸான கதையை தயார் செய்துள்ளார் சரண்.
முழுக்க முழுக்க அஜித்துக்காகவே தயார் செய்யப்பட்ட அந்த கதையை சரண் ரொம்பவே எதிர்பார்த்திருந்தாராம். ஆனால், கதையை கேட்ட அஜித் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டாராம். ஆனாலும் அந்த கதையை அப்படியே விட்டுவிட மனமில்லாத சரண், லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து நேரடியாக சீயான் விக்ரமிடம் சென்றுள்ளார்.

சேது, தில் என கம்பேக் கொடுத்துக்கொண்டிருந்த விக்ரம், இந்த கதையில் நடித்தால் விஸ்வரூபம் எடுக்கலாம் என சரியாக ஸ்கெட்ச் போட்டுள்ளார். அப்படி உருவான திரைப்படம் தான் ஜெமினி. ஏவிஎம் தயாரிப்பில் பக்கா கமர்சியல் படமாக வெளியான ஜெமினி, திரையரங்குகளில் 125 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனைப் படைத்தது. முக்கியமாக இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் தான் விக்ரம் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது.
ஜெமினி படத்தின் விஸ்வரூப வெற்றியைப் பார்த்த அஜித், இந்த கதையையா மிஸ் செய்தோம் என ரொம்பவே ஃபீல் செய்துள்ளார். அஜித்துக்காக எழுதிய கதையில் விக்ரம் நடித்து அவரது மார்க்கெட் உச்சம் தொட்டது, அஜித் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் இப்போது அதை நினைத்து ஃபீல் செய்து என்ன பலன் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











