தேவயானி அஜித்குமார்.. காதல் கோடை படத்தின் மூலக்கத்தைக்குப் பின் இப்படி ஒரு வரலாறு இருக்கா?
சென்னை: நடிகர் அஜித் குமார் - தேவயானி இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தில் கரண், மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. படத்தின் வெற்றிக்கு தேனிசை தென்றல் தேவாவின் இசையும் காரணமாக மாறியது. இந்நிலையில் படத்தின் மூலக்கதைக்கு பின்னால் இருக்கும் வரலாற்றுச் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
காதல் கோட்டை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமே படத்தின் கதை. அதாவது, படத்தில் அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே காதலித்துக் கொள்வார்கள். அவர்கள் காதலும் அன்பும் கடித போக்குவரத்திலேயே நடைபெறும். இந்த கதை மொத்த தமிழ் சினிமாவுக்கும் புதியது, அதற்கு முன்னரும் தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதைக்களத்தில் படம் வரவில்லை. அதன் பின்னரும் இன்னும் வரவில்லை.
இப்படியான நிலையில், காதல் கோட்டை படத்தின் கதையின் மூலக் கதைக்கு வரலாற்றுச் சம்பவம் மூலக் காரணமாக இருந்துள்ளது என்று கூறலாம். இதை இயக்குநர் அகத்தியனும் கூட ஒப்புக் கொள்வார். அதாவது, " வரலாற்றில் நட்பின் இலக்கணமாக கூறப்பட்டவர்களில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் நட்பு குறித்து கூறலாம். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நண்பர்களாக இருந்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

மூலக்கதை: இவர்கள் இருவரும் தங்களது நட்பை கடிதத்தின் மூலமாகவே வளர்த்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் அவர்களின் மரணமும் ஒருமித்தவாறே இருந்தும் உள்ளது. அதாவது, அந்த காலத்தில் சிலர் தங்களது வாழ்வை முழுவதும் வாழ்ந்து விட்டதாக கருதினால், வடக்கிருத்தல் முறை மூலம் மரணத்தை தழுவுவார்கள். அதாவது, வடக்கு நோக்கி அமர்ந்து, உணவு எதுவும் உண்ணாமல் மரணத்தை தழுவுவார்கள்.
வடக்கிருத்தல்: இந்த வடக்கிருத்தல் முறை மூலம் மரணத்தை தழுவ கோப்பெருஞ் சோழன் முடிவெடுத்து வடக்கிருந்து வருகிறார் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும், பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் விட்டார். இந்த மன்னர் காலத்து நட்பின் இலக்கணத்தை உணர்த்தும் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் கதையில் இருந்து ஒருவரை மட்டும் எடுத்து அதை காதல் கோட்டை படத்தின் திரைக்கதையாக மாற்றியுள்ளார் இயக்குநர் அகத்தியன்.
விருதுகள்: நட்பை காதலாக மாற்றி சினிமாவாக மாற்றினாலும், காதல் கோட்டை படத்திற்கு பெரும் வெற்றியை ரசிகர்கள் வாரி வழங்கினார்கள். அஜித்தை காதல் மன்னனாக மாற்ற இந்த படமும் ஒரு முக்கிய காரணமாக மாறியது. காதல் கோட்டை படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த இயக்கத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. படம் திரையரங்கில் மட்டுமே சுமார் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. தமிழில் காதல் கோட்டை படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததால், இயக்குநர் அகத்தியன் இந்த படத்தை கன்னடத்திலும், பெங்காலியும் மற்றும் இந்தியிலும் இயக்கி அங்கேயும் வெற்றிகளைக் குவித்தார்.


Click it and Unblock the Notifications











