அஜித் காதலித்த முதல் ஆள் யார் தெரியுமா?.. போதைக்கு நடிகை அடிமையானதால் முடிவுக்கு வந்த காதல்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக அவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. இவற்றில் குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி வருகிறது. அதேபோல் விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரது முதல் காதல் எப்படி பிரேக் அப் ஆனது என்பது குறித்து இணையத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
அஜித்குமாருக்கென்று பெரும் ரசிகர் படை இருக்கிறது. ரசிகர் மன்றங்களை அவர் கலைத்தாலும் அவருக்கான ரசிகர்கள் குறையவே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு அதிக அளவு ஓபனிங் வசூல் கிடைப்பது அஜித்துக்கு மட்டும்தான். மன்றங்களை கலைத்தாலும் அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் வெறி பிடித்த அன்பை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிரண்டு போகும் என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு தனக்கான ரசிகர்களை பலமாக வைத்திருக்கிறார் அவர்.

விடாமுயற்சி: கடைசியாக அவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதலில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படம் தற்போது ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.முதலில் பொங்கலுக்கு இந்தப் படம்தான் ரிலீஸாவதாக இருந்தது ஆனால் விடாமுயற்சி காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸ்: ஒருபக்கம் பிஸியாக நடித்துவரும் அஜித்குமார் மறுபக்கம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிலும் தனது டீமோடு கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இதனையடுத்து அஜித்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஷாலினியும், அஜித்தும் கிஸ் அடித்துக்கொண்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்கும் எவ்வளவு காதல் என்று வாஞ்சையோடு கூறுகிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தின் முதல் காதல் குறித்து பார்க்கலாம்.
போதைக்கு அடிமை: அதாவது நடிகை ஹீராவைத்தான் அஜித் முதலில் காதலித்தார். ஆனால் இந்தக் காதலுக்கு ஹீராவின் தாய் தடையாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித்தே பழைய பேட்டி ஒன்றில், "நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்தான். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது. அவர் ஒரே நிலையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார்" என்றார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











