Throw back: எனக்கு 15 கணவர்கள்.. ஆடை படத்தில் நடித்தது குறித்து அமலா பால் சர்ச்சை பேச்சு!

சென்னை: ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அமலா பால் பேசியது திடீரென டிரெண்டாகி வருகிறது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படம் பலவிதமான சர்ச்சையில் சிக்கியது.

இத்திரைப்படத்தில் நடித்த அமலா பாலுக்கு எதிர்ப்பு வலுத்து அவரின் சினிமா கேரியரை காலிசெய்துவிட்டது.

Amala Paul controversy speech about her role in the movie Aadai

ஆடை: பெண்களின் உடல் குறித்து நமக்கு இருக்கும் எண்ணத்தை மாற்றும் திரைப்படம் தான் ஆடை. இதில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் படத்தொகுப்பாளர் ஷாபிக்யூ முகமத் அலி இணைந்து பணியாற்றியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.

அமலா பால் சர்ச்சை பேச்சு: சர்ச்சைக்குரிய இந்த படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசிய அமலா பால், இயக்குநர் இந்த படத்தின் கதையை சொன்னதும், சவாலான கதாபாத்திரம் நடித்துவிடலாம் என்றுதான் தோன்றியது. ஆனால், நிர்வாண காட்சியில் நடிக்கும் போது பதற்றத்துடன் இருந்தேன். இத்தனை பேர் முன்பு ஆடையின்றி எப்படி நடிப்பது என்கிற எண்ணம் என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

15 கணவர்கள்: அந்த காட்சி படமாக்கும் போது படப்பிடிப்பில் 15 பேர் இருந்தார்கள். நான் அந்த 15 பேரையும் என் கணவராக நினைத்துக் கொண்டு தான் நடித்தேன் என்று பேசி இருந்தர். அமலா பாலின் அந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது அந்த பேச்சு இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

சவாலாக இருந்தது: ஆடை படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், ஆடை படத்தில் நிர்வாணகாட்சியை படமாக்கியது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் அந்த பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்று தெரியவேண்டும். அதற்காக ஆபாசமாகவும் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டோம் என கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X