பயங்கரமான ஆளு டா நீ.. திரிஷாவை வைத்துக்கொண்டு நடிகரை கலாய்த்த சூர்யா.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியன ரெட்ரோ திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. கங்குவா கொடுத்த தோல்வியை இதில் சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இப்போது அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வாடிவாசல் திரைப்படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த கங்குவா திரைப்படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கேற்றபடிதான் படக்குழுவும் பில்ட் அப்புகளை அள்ளி வீசியது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஹிட்டாகவில்லை. படத்தை பார்த்த அத்தனை பேரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். ட்ரோல்கள் எல்லை மீறி போனதை கண்ட ஜோதிகா இன்ஸ்டாகிராமில் காட்டமாக போஸ்ட் போடும் நிலைமையெல்லாம் உருவானது. அதை ரெட்ரோ படத்தில் சரி செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்த சூர்யாவுக்கு அந்தப் படமும் அடி வாங்கியது.
ஆர்.ஜே.பாலாஜியுடன் கூட்டணி: சூர்யா ஒரு தரமான ஹிட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்போது அவர் கருப்பு படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் கமிட்டாகியிருந்த வாடிவாசல் படம் ட்ராப்பாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அம்பானி சங்கர் போஸ்ட்: இந்நிலையில் சூர்யாவுடன் ஆறு படத்தில் நடித்த நடிகர் அம்பானி சங்கர் தனது முகநூல் பக்கத்தில் சூர்யா குறித்து பதிவிட்டிருக்கிறார். அவர் அந்தப் பதிவில், "ஆறு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் அன்று சூர்யா சார் என்னை சிறுவன் என்று நினைத்துக்கொண்டிருந்தார், சிங்கமுத்து அண்ணன் தான் சூர்யா சாரிடம் தம்பி அவனுக்கு 18 வயசு ஆகிடுச்சு என்று கூறினார்.

திரிஷாவுக்கு முன்பு: அதன் பிறகு சூர்யா சார் மற்றும் திரிஷா அவர்களுடன் நான் ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு, திரிஷாவை பார்த்து எப்படி இருக்கிங்க மேடம் என்று பேசிக்கொண்டு இருந்தேன். இடை மறித்த சூர்யா சார் அவன் சின்ன பையன் இல்ல 18 வயசாச்சி என்றார். திரிஷா மேடம் ~ நீங்களும் சின்னப் பையன்னு நினைச்சிட்டிங்களா என்று சூர்யா சாரை பார்த்து கேட்டார். சூர்யா சார் ஆமாம் என்றார்.
பயங்கரமான ஆள்டா நீ: நான் அஜித் சாரோட "ஜி" படத்தில் நடிக்கும்போது இவரும் நடிச்சாரு, அப்போ நானும் இவரை சின்ன பையன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். இயக்குனர் லிங்குசாமி சார்தான் அவனுக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான் திரிஷான்னு சொன்னாரு அப்போவே தெரியும் இவர பத்தின்னு திரிஷா சொன்னாங்க.. சூர்யா சார் சிரிச்சுகிட்டே பயங்கரமான ஆள இருக்கியே டா என்று கலாயத்தார்.
சூரரைப் போற்று: அதன் பிறகு சூரரைப் போற்று படப்பிடிப்பு எங்கள் ஊரில் (திருமங்கலத்தில்) நடைபெற்றது, என் அப்பாவையும் அழைத்துக்கொண்டு சென்று சூர்யா சாரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது ஆறு படத்துல பாத்ததுக்கப்புறம் எத்தனை வருஷம் ஆச்சுய்யா என்றார். 14 வருஷம் ஆச்சு சார் என்றேன்.. என் தந்தையிடம் உங்க பையன் ரொம்ப சமர்த்துப்பா என்று கூறினார் சூர்யா சார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











