பாவனி கைல இன்னும் Ex-husband ஓட டாட்டூ.. மனசுக்குள் தீராத வலி.. அமீர் பேட்டி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்க தொடங்கிய அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஜோடிக்கு இரு தினத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அமீர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த பாவனி ரெட்டிக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தெலுங்கில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த பாவனி, தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல்களில் நடித்தார். அந்த சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவியில் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்தார். அந்த சீரியல் தான் பாவனி ரெட்டிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. ஆனால், சீரியல் பீக்கில் இருந்த நேரத்தில், பாவனி அந்த சீரியலில் இருந்த விலகி திருமணம் செய்து கொண்டார்.

Pavani reddy Ameer throwback

அமீருடன் காதல்: பாவனி ரெட்டி தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு காதலர் தினத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் பாவனி ரெட்டி ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். ஆனால், திருமணமான நான்கு மாதத்திலேயே நடிகர் பிரதீப் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மனவேதனையில் இருந்த பாவனி ரெட்டி, அதில் இருந்து மீண்டு, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அமீர், பாவனியை காதலித்தார். முதலில் இந்த காதலை ஏற்றுக்கொள்ளாத பாவனி, பின் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

கோலாகல திருமணம்: இதையடுத்து கடந்த 20ந் தேதி ஹல்தி கொண்டாட்டத்துடன் அமீர், பாவனி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பிரியங்கா தனது கணவர் வசியுடன் வந்து திருமணத்தில் கலந்து கொண்டார். அமீர் பிறப்பால் இந்துவாக இருந்த போதிலும், அவர் முஸ்லீமாக மதம் மாறிவிட்டார். இருந்த போதும், இந்து முறைப்படி பாவனி கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் விஜே பிரியங்கா நாத்தனார் முடிச்சு போட்டார். தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Pavani reddy Ameer throwback

இன்னும் மறக்கல: இந்நிலையில், அமீர் பாவனி குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், பாவனியின் கணவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதும், இன்னும் பாவனி மனதில் அந்த வலி இருக்கு. அவங்க கையில இன்னும் பிரதீப்பின் பெயர் டாட்டூ இருக்கு, அதை நான் எடுக்கட்டுமா என்று கூட கேட்டது இல்லை, அதை எடுக்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததுக்கூட இல்லை. அந்த அளவிற்கு பாவனி அவரை காதலித்து இருக்கிறார். பாவனி ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி, எவ்வளவு தான் சண்டை போட்டாலும், அதை உடனே மறந்துவிடுவார். இதையெல்லாம் தாண்டி, அவ மனதிற்குள் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கிறது. அவ எப்போதுமே, இந்த ரிலேஷன்ஷிப்பும் என்கூட இருக்காது, நிலைக்காது என்றே சொல்லிக்கொண்டே இருப்பாள் என்று பேசி இருக்கிறார்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X