Vaadivaasal: சூர்யாவின் வாடிவாசல்.. சுயநலவாதியாக மாறிய வெற்றி மாறன்.. வலையில் சிக்கிய அமீர்!
சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறிய படம், விசாரணை பாகம் 2. ஏற்கனவே விசாரணை பாகம் 1 படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இப்படியான நிலையில் இந்தப் படும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படம், வாடி வாசல். இந்தப் படத்தின் பணிகளில் வெற்றி மாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் இவர், அமீர் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களிடம் பொறாமை குணம் இல்லாமல், உள்ளது என்பது ஒரு ஆரோக்யமான சூழல். அதனால்தான் ஒரு இயக்குநரின் படத்தை புரோமோட் செய்ய மற்ற இயக்குநர்கள் தயக்கம் காட்டுவதில்லை. அதேபோல் இவர்களுக்கு இடையிலான நட்பு, பல நல்ல படங்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளது. இயக்குநர்களில், அமீர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில் தொடங்கி, அந்தப் படத்தின் திரைக்கதையினை வலுப்படுத்த தங்களது ஐடியாக்களைச் சொல்வது வரை என பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை படத்தினைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று, ராஜன். அமீர் ஏற்று நடித்திருந்த இந்த ராஜன் கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதற்கு வெற்றி மாறனின் எழுத்து ஒரு காரணமாக இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தினார், அமீர். அதனால்தான் அந்தக் கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
வாடிவாசல்: இப்படியான நிலையில் இவர்கள் இருவரும் அதாவது வெற்றி மாறன் மற்றும் அமீர் அடுத்து இணையவுள்ள படம் என்றால் அது, வாடி வாசல். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு தொடர்பாகத்தான் படமாக்கப்படவுள்ளது. இதற்காக சூர்யா தனது வீட்டில் இரண்டு காளைகளை வாங்கி வளர்த்து வருகின்றார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பாதியில் தொடங்கவுள்ளது.
அமீர்: ஏற்கனவே ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில், வெற்றி மாறன், அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமீர் முதலில் பேசுகையில், வெற்றி மாறன் என்னிடம் வந்து, 'சூர்யாவுடன் உங்களுக்கு பணிபுரிய ஓ.கேவா எனக் கேட்டார். நான் உடனே, உங்களுக்கு ஓ.கே. என்றால் எனக்கு ஓ.கே எனக் கூறினேன்’ அப்படித்தான் வாடிவாசலில் நான் கமிட் ஆனேன் எனக் கூறினார்.
சுயநலம்: அதன் பின்னர், வெற்றி மாறன் பேசுகையில், “ வடசென்னை படத்தின் ராஜன் கதாபாத்திரத்திற்கு அமீருக்கு நான் சில இன்புட்ஸ் கொடுக்க வேண்டி இருந்தது. வாடிவசலில் அமீர் இருந்தால், எனக்கு அதிகம் இன்புட்ஸ் கிடைக்கும் என்பதால், எனது சௌகரியத்திற்காக அவரை படத்தில் நடிக்க வைக்கின்றேன். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அமீர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்” என பேசினார். இதனைப் பார்த்த ரசிகர்கள், வெற்றி மாறன் தனது சுயநலத்திற்காக அமீரை வாடிவாசல் படத்தில் நடிக்க வைக்க ஸ்கெட்ச் போட்டுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











