சங்கீதா நல்ல மருமகள் மட்டுமல்ல.. விஜய் அம்மாவே சொன்ன முக்கியமான விஷயம்.. சங்கீதாவிற்கு இதெல்லாம் பிளஸ்
சென்னை: நடிகர் விஜய் மீது அவரது மனைவி அடுக்கிய குற்றச்சாட்டுகள் அவரது ரசிகர்கள் தொடங்கி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது விஜய் நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழகுவதாகவும், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தனியாகவே வாழ்ந்து வருகிறோம். அதேபோல் எனது புகுந்த வீட்டில் எனக்கான அனைத்து உரிமைகளையும் தடுத்தார், பொருளாதார ரீதியான நெருக்கடி கொடுத்தார், எனவே எங்களின் திருமண பதிவை ரத்து செய்து விவகரத்து வழங்குமாறு குறிப்பிட்டு விவாகரத்து கேட்டிருந்தார்.
சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டும் இல்லாமல், தேவைப்பட்டால் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய் தரப்பில் அழுத்தம் கொடுத்தால் நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் விஜய்யின் அம்மா ஷோபா, விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நல்ல அம்மா: அதாவது, ஷோபா நல்ல மருமகள் மட்டுமல்ல, நல்ல மகளும் தான். உண்மையாலுமே அவர் ஒரு நல்ல அம்மா. அவர் மொத்த குடும்பத்தையும் மிகவும் நேர்த்தியாக கவனித்துக் கொள்கிறார். ஒவ்வொருவர் மீதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் குழந்தைகள் மீது எப்போதும் அக்கறையாக இருக்கிறார். அவர்களுக்கு ஒரு கப் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றால் கூட சங்கீதாவே தான் கொடுப்பார். அதில் தான் அவருக்கு திருப்தி" என்று தெரிவித்துள்ளார்.

சங்கீதாவுக்கு பிளஸ்: இதை ஷோபா அவரது பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சங்கீதா விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், சங்கீதா குறித்து ஷோபா மற்றும் விஜய்யின் அப்பா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் தெரிவித்த கருத்துகள் தொடர்பான பழைய பேட்டிகள், அதில் சங்கீதா குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் உள்ளிட்ட பலவும் இணையத்தில் வேகமாகவும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. அதேபோல் விஜய் தனது மனைவி சங்கீதா குறித்து தெரிவித்த கருத்துக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











