நான் எந்த ஜோடியையும் பிரித்துவிட்டதே இல்லை.. திரிஷா அதிரடி.. என்னவெல்லாம் சொல்லிருக்காங்க பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்துவரும் திரிஷா; கடந்த சில வாரங்களாக பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே திரிஷாவும், விஜய்யும் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்தார்கள். அப்போதிருந்து திரைத்துறைக்குள்ளும் சரி, ரசிகர்களிடையேயும் சரி; திரிஷாவுக்கு எதிரான கருத்தே நிலவிவருகிறது. ஆனால் அவர் அதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

நடிகைகள் பொதுவாக 20 வருடங்களாக ஃபீல்டில் ஹீரோயினாகவே நிலைத்திருப்பது அபூர்வம்தான். அந்த அபூர்வங்களில் ஒருவாக இருக்கிறார் திரிஷா. கடந்த வருடத்தில் மட்டும் அவர் ஹீரோயினாக நடித்த தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய மூன்று படங்கள் வந்தன. மூன்றுமே சுமார் ரகம்தான். அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் அந்தப் படம் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறாராம்.

Amid Vijay Controversy I Never Broke Any Couple Trisha Krishnan s Viral Video Sparks Debate
Photo Credit:

சர்ச்சையில் திரிஷா: இப்படி கரியர் படு பிஸியாக போய்க்கொண்டிருக்கும் சூழலில்; அவரது பெயர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. நடிகர் விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா கடந்த மாதம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தனது கணவருக்கும், இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்றும்; தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் வெளியிடுவேன்' என்றும் தெரிவித்திருந்தார்.

Also Read
தனிக்குடித்தனம் போயும் பயனில்லை.. ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
தனிக்குடித்தனம் போயும் பயனில்லை.. ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

விஜய்யுடன் திரிஷா: பலரும் அந்த நடிகை திரிஷாதான் என ஆரூடம் கூற ஆரம்பித்தாலும்; உறுதியாக எதுவும் தெரியாதவரை பேசக்கூடாது என அடக்கியே வாசித்தார்கள். ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்யுடன் ஒரே கலர் டோனில் உடை அணிந்துகொண்டு ஒரே காரில் வந்து திருமணம் ஒன்றில் மணமக்களை வாழ்த்தினார் திரிஷா. சேர்ந்து ஃபோட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள். அவர்கள் அப்படி செய்தது பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் உண்டு செய்தது.

வலுக்கும் கண்டனங்கள்: திரிஷாவும், விஜய்யும் அப்படி செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். விஜய் ரசிகர்கள் எல்லாம் திரிஷாவை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு திரைத்துறையிலிருந்தும் எதிர்ப்புகளே வந்திருக்கின்றன. முதலில் சமுத்திரகனி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் குந்தவை ஸ்டேட்மெண்ட் வைரலானது. அதற்கு திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார். அதற்கு பார்த்திபனும் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இதனால் விஜய் - திரிஷா - சங்கீதா விவகாரத்தில், திரிஷா - பார்த்திபன் பிரச்னை என ஒன்று புதிதாக முளைத்தது. ஒருவழியாக அப்பிரச்னை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது.

திரிஷாவின் பேட்டி: இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷனின்போது திரிஷா பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், 'நான் எந்தக் காதல் ஜோடியையும் பிரித்துவிட்டதே இல்லை. அதற்காக நான் நல்ல பெண் என்றெல்லாம் கிடையாது. மற்றவர்களின் காதலில் எனக்கு கவனமும் இல்லை. அப்படி செய்ததும் இல்லை. அதேசமயம் சிலரின் காதல்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன்' என்றிருந்தார். மேலும் ரவி மோகனின் காதல் சேர்வதற்கு தானும் ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X