விஷ வலையில் விஜய்.. எவ்வளவோ சொன்னேன் கேட்கல.. தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி புலம்பிருக்காரே
சென்னை: சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் விவகாரம் பெரிய பூதாகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைவிடவும் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் அது திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வந்ததுதான். அவர் எந்த ஐடியாவில் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என தெரியாமல் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். சிலரோ கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும்; அவருக்கு தன்னுடைய வாக்கு கிடையாது என்றும் ஓபனாகவே அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய்யை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்திட வேண்டுமென்று நினைத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதன் காரணமாகத்தான் விஜய் மக்கள் இயக்கம் இருந்தபோது அதில் பயங்கர ஆக்டிவ்வாக விஜய்யை வைத்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இடையில் சில காரணங்களால் அவர்களுக்குள் மனஸ்தாபம் வந்துவிட; தனது தந்தையை சுத்தமாக ஓரங்கட்டினார் விஜய். இவர்களது விவகாரம் நீதிமன்றம்வரையெல்லாம் சென்றது நினைவுகூரத்தக்கது.

உள்ளே வந்த ஆனந்த், வெளியே போன தந்தை, சங்கீதா: தந்தைக்கும், மகனுக்கும் இடையே மனஸ்தாபம் வந்ததற்கு இப்போது தவெக பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தால்தான் என்பது பலரது கருத்து. காலங்கள் ஓடி தவெக அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டார் விஜய். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்குகிறது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் சங்கீதா விவாகரத்து வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் வைத்திருக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் பகீர் கிளப்புகின்றன
அவர்கள்தான் காரணமா?: சங்கீதா இப்படி ஒரு முடிவெடுத்ததற்கு பின்னணியில் திமுக இருப்பதாக வாள் சுழற்றினர் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸும், ரசிகர்களும். ஆனால் அவர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக; சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணத்தில் நடிகை திரிஷாவுடன் கலந்துகொண்டார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் எல்லாம், 'இவருக்கு இப்படி செய்ய சொல்லி யார் சொல்லி கொடுப்பது' என கேள்விகளை எழுப்புகிறார்கள். விஜய்க்கு நெருக்கமாக முன்னர் இருந்தவர்களோ அரசியல் ரீதியாக புஸ்ஸி ஆனந்த் கெடுக்கிறார், பெர்சனல் வாழ்க்கையை ஜெகதீஷ் பழனிசாமி கெடுக்கிறார் என வெளுக்கவும் செய்கிறார்கள்.
எஸ்.ஏ.சி பேட்டி: அதேசமயம் விஜய் தனக்கு அருகில் தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சியைத்தான் வைத்திருக்க வேண்டும். அவர் மட்டும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கவே விடமாட்டார் எனவும் புலம்புகிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் இப்போது இருப்பவர்கள் பற்றி விஜய் மக்கள் இயக்கம் இருந்தபோது சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ஒரு காலகட்டம் வரும்போது அனைத்தையும் தாங்கித்தானே ஆக வேண்டும். இரண்டு, மூன்று தடவைகள் சொல்லி பார்த்துவிட்டேன் அவருக்கு சுத்தமாக புரியவில்லை.
வெளியே நடப்பதே தெரியாது: விஜய்க்கு வெளியே நடப்பதே தெரியாது. அவரை இரும்பு கேட்டுக்குள் கொண்டு சென்று வைத்துவிட்டார்கள். என்னுடைய பிள்ளை அந்த விஷ வலையிலிருந்து வெளியே வர வேண்டும். அவ்வளவுதான் எனக்கு. ஒரு அப்பாவுக்கு பிள்ளை மீது அக்கறை இருக்கக்கூடாதா? மகன் இதில் மாட்டிக்கிறாரே.. எப்படியாவது அவர் அதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டுமே என்ற ஆதங்கம் இருக்கிறது. அவருக்கு நல்லது செய்வது மாதிரியே நடித்துக்கொண்டு கெட்டது செய்கிறார்கள். ஒரு அமைப்பில் ஆனந்த் தனக்கான விசுவாசிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அரசியல் தெரியும்தானே.. நாளை இந்த இயக்கம் பெரிதாக வளரும்போது அதனால் எவ்வளவு பாதிப்பு வரும்" என்றார்.


Click it and Unblock the Notifications















