விஜய்யுடன் அந்த நடிகையை பார்க்கும்போது.. மனம் திறந்து பேசிய சங்கீதா.. ஓபனா சொல்லிருக்காங்க

சென்னை: விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். தனது டைவர்ஸ் மனுவில் அவர் ஒரு நடிகையையும் இழுத்துவிட்டிருக்கிறார். பெயரை அவர் பொதுவெளியில் சொல்லாவிட்டாலும்; அவர் குறிப்பிட்ட நடிகை திரிஷாதான் என்று நேற்றிலிருந்து பலமாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தப் பேச்சுக்கள் எழுவதற்கு விஜய், திரிஷாவே வழிவகை செய்துவிட்டார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

லண்டனை சேர்ந்த ஈழத்து பெண்ணான சங்கீதா; விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரசிகையாக இருந்து வாழ்க்கை துணையாக மாறினார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் படம் இயக்க ஆரம்பித்துவிட்டார். மகள் லண்டனில் படித்துவருவதாக தெரிகிறது. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் சில வருடங்களாக மனஸ்தாபம் ஏற்பட்டது. அது நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் குடும்பத்தினரும், நண்பர்களும் இருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

Amid Vijay Trisha Controversy Sangeetha s Nanban Event Throwback Video Goes Viral
Photo Credit:

விவாகரத்து கேட்ட சங்கீதா: இனிமேலும் இந்த திருமண உறவில் நீடிப்பது சரியில்லை என்பதை உணர்ந்து சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துவிட்டார். அந்த மனுவில் விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை மலை போல் அடுக்கியிருந்தார். அதுவும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும்; நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தது பெரிய அதிர்ச்சியை கிளப்பின. பலரும் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்தார்கள். ஆனால் அவர் இதுகுறித்து எதுவுமே பேசாமல் வழக்கமான அமைதியையே பதிலாக கொடுத்தார்.

Also Read
மனைவியை கலங்காம பார்த்துக்கோ.. விஜய், திரிஷா மணமக்களுக்கு அப்படி வாழ்த்து சொன்னாங்களா?
மனைவியை கலங்காம பார்த்துக்கோ.. விஜய், திரிஷா மணமக்களுக்கு அப்படி வாழ்த்து சொன்னாங்களா?

திரிஷாவுடன் விஜய்: சங்கீதா நடிகையின் பெயரை சொல்லாவிட்டாலும்; அது திரிஷாதான் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொன்னது. நிலைமை இப்படி இருக்க சென்னையில் நேற்று தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சுரேஷின் மகன் திருமணம் நடைபெற்றது. அதில் விஜய்யும், திரிஷாவும் ஒரே நிறத்திலான உடையில் ஒன்றாக வந்தார்கள். மணமேடைக்கும் ஒன்றாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ் கொடுத்தார்கள். அவர்கள் அப்படி வந்ததையடுத்து தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மாறிவிட்டார்கள் அவர்கள்.

சங்கீதா பாவம்: இத்தனை நாட்கள் இவ்விஷயத்தில் விஜய்க்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்து சங்கீதாவை அட்டாக் செய்த தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸே இந்த விஷயத்தில் தங்கள் அண்ணாவை நினைத்து கடுப்பாகியிருக்கின்றனர். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர் இப்படியெல்லாம் செய்கிறாரே என புலம்பி தள்ளுகிறார்கள். மேலும் விவாகரத்து கிடைக்கும்வரை சட்டப்படி விஜய்யின் மனைவி சங்கீதாதான். அப்படி இருக்கும்பட்சத்தில் அதிகப்படியான மன உளைச்சலை தரும் விதமாக விஜய் அண்ணா திரிஷாவுடன் வந்திருக்கக்கூடாது. சங்கீதா இதை பார்த்து எவ்வளவு நொந்திருப்பார் என்றெல்லாம் பதிவுகளை போடுகிறார்கள்.

சங்கீதாவின் பேச்சு: இப்படி விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது நண்பன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கீதாவும் கலந்துகொண்டிருந்தார். அவரிடம் கோபிநாத், 'விஜய்யுடன் எந்த ஹீரோயின் நடித்தால் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும்?' என கேள்வி எழுப்பினார். அதற்கு அவரோ, 'ஜெனிலியா' என கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்களோ, விஜய்க்கு திரிஷாதான் நல்ல ஜோடி என பலரும் சொல்வார்கள். ஆனால் சங்கீதா அண்ணியோ அப்போவே திரிஷாவை ஒதுக்கி வைத்திருந்திருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X