அவங்கள பாருங்க எவ்வளவு டெடிகேஷன்.. அஜித் படக்குழுவை பார்த்து நெகிழ்ந்த அமிதாப் பச்சன்

தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் அவருக்காக ஜெயலலிதா செய்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கென்ற ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள்.

Amitabh Bachchan Blessings Ajith Movie Crew Here are the full details


ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.

ஏகே : தொடர்ந்து தீனா, வரலாறு உள்ளிட்ட படஙக்ள் அவருக்கு வெற்றி படங்களாக அமைய மீண்டும் தோல்வியை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டால். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.

நெகிழ்ந்த அமிதாப் பச்சன்: தான் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் அஜித் ரொம்பவே டெடிகேஷனாக இருப்பவர் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவதுண்டு. இந்தச் சூழலில் வில்லன் படத்தின்போது நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது படத்தில் இடம்பெற்ற 'ஒரே மனம்’ பாடலின் ஷூட்டிங் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றிருக்கிறது. அந்தச் சமயத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அஜித், சார் எனக்கு ரொம்ப பசிக்கிறது. சாப்பிட போகலாமா என்று சொல்லியிருக்கிறார்.

அமிதாப் பச்சன்: அதனையடுத்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அதே ஹோட்டலில் அமிதாப் பச்சன், கரீனா கபூர் உள்ளிட்டோர் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தார்கள். இரண்டு தரப்பும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களாம். அந்தச் சமயத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர் ஒருவர், சார் ஸ்னோ ஃபால்ஸ் வருகிறது என்று கூறினாராம். உடனடியாக கே.எஸ்.ரவிக்குமார், அஜித் உள்ளிட்டோர் சாப்பிட்டதை அப்படியே வைத்துவிட்டு ஷூட்டிங் செய்ய கிளம்பிவிட்டார்களாம். ஏனெனில் அது மீண்டும் எப்போது வரும் என்று தெரியாதாம். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அமிதாப் பச்சன், தனது டீமிடம், 'அங்கே பாருங்க தமிழ் சினிமாக்காரங்களை. இயக்குநரும், ஹீரோவும் எவ்வளவு டெடிகேஷனா இருக்காங்க. அவங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று நெகிழ்ந்தபடி சொன்னாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X