ரஜினி சொன்ன ஒரே வார்த்தை.. டக்கென காலில் விழுந்த ஆனந்த்ராஜ்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் காலில் ஆனந்த்ராஜ் விழுந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

Throwback Stories Rajinikanth Anand Raj

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கூலி: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தில் பாலிவுட்டிலிருந்து நடிகர்களை இறக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினிகாந்த் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

காலில் விழுந்த ஆனந்த்ராஜ்: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் காலில் ஆனந்த்ராஜ் விழுந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ரஜினியின் கரியரிலேயே மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஆனந்த்ராஜும் நடித்திருப்பார். முக்கியமாக ரஜினிகாந்த்தை கம்பத்தில் கட்டி வைத்து ஆனந்த்ராஜ் அடிக்கும் சீன் இன்றுவரை பலரது ஃபேவரைட். சூழல் இப்படி இருக்க பாட்ஷா படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக ஆனந்த்ராஜை ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணா, எழுத்தாளர் பாலகுமாரன் அழைத்தார்களாம்.

அவர்களை சந்திக்க சென்ற ஆனந்த்ராஜ் ரஜினிகாந்த்திடம், 'எதுக்காக சார் என்னை செலக்ட் பண்ணீங்க' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினியோ, 'இல்லை என்னை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் சீன் ஒன்று இருக்கிறது. அது வேறு யார் செய்தாலும் செட் ஆகாது. நீங்கள் செய்தால் கண்டிப்பாக செட் ஆகும்' என்று சொன்னாராம். இதனை எதிர்பார்க்காத ஆனந்த்ராஜ் உடனடியாக ரஜினிகாந்த்தின் காலில் விழுந்து, நன்றி சார் என்று சொல்லிவிட்டு சென்றாராம். இதனை ஆனந்த்ராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X