Andrea On Vetrimaaran - வெற்றிமாறன் செய்த காரியம்.. தெறித்து ஓடிய ஆண்ட்ரியா - என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Andrea On Vetrimaaran (வெற்றிமாறன் குறித்து ஆண்ட்ரியா) வெற்றிமாறன் செய்த செயல் ஒன்றால் உடனடியாக அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்திருக்கிறார்.
வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது தனித்துவமான மேக்கிங்கால் கவனத்தை ஈர்த்தார். ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருந்த அந்தப் படத்தை பார்த்த பாலுமகேந்திரா இவ்வளவு வயலன்ஸ் வெற்றிமாறனுக்குள் இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவில்ல தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்த வெற்றிமாறன்: முதல் படம் கமர்ஷியலாக கொடுத்து வெற்றி பெற்றுவிட்டாலும் தனது அடுத்தடுத்த படங்களுக்கான கதையை பார்த்து பார்த்து செதுக்கினார் வெற்றிமாறன். சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த வெற்றிமாறன் மதுரையை கதைக்களமாக கொண்டு ஆடுகளம் படத்தை இயக்கினார். சேவல் சண்டையையும், அதனை மையமாக வைத்து மனிதர்களுக்குள் எழும் ஈகோவையும் வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளிவந்தது ஆடுகளம் திரைப்படம்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநராக மாறிய வெற்றிமாறன்: ஆடுகளம் பெற்ற வெற்றி அவரை இந்திய அளவில் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாற்றியது. ஆடுகளத்தை முடித்துவிட்டு விசாரணையை தொடங்கினார். சந்திரன் என்பவர் எழுதிய லாக்கப் நாவலை தழுவி அந்தப் படம் உருவாக்கப்பட்டது., அதுவரை தமிழ் சினிமாவில் காவல் துறையை போற்றி படங்கள் வந்த சூழலில் விசாரணைதான் காவல் துறையினரின் கோர முகத்தை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
அடுத்த தேசிய விருது பெற்ற அசுரன் வெற்றிமாறன்: விசாரணைக்கு பிறகு வெற்றிமாறன் வடசென்னை படத்தை இயக்கினார். அதற்கு அடுத்ததாக அசுரன் படத்தை இயக்கினார். அசுரன் படமும் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்து கவனம் ஈர்த்தது. மேலும் இந்தப் படமும் தேசிய விருது வென்றது. அவர் கடைசியாக விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.

விமர்சனங்களை சந்தித்த வடசென்னை: வெற்றிமாறன் இயக்கியதிலேயே அதிக அளவு கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று வடசென்னை. அந்தப் படம் எந்த அளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனங்களையும் சந்தித்தது. வடசென்னைவாசிகளை வெற்றிமாறன் மிகவும் கீழ்த்தரமாக காட்டியிருக்கிறார் என்று ஒரு தரப்பினர் கூற; அந்தப் படத்திற்கு தேவையானதைத்தான் காட்டியிருக்கிறார் என மறுதரப்பினர் கூறினர்.
ஆண்ட்ரியாவுக்கு முக்கியமான படம் வடசென்னை: வடசென்னை படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் நடித்தவர்கல் அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும்; ஆண்ட்ரியா ஒருபடி மேலே சென்று ஸ்கோர் செய்திருப்பார். சந்திரா கதாபாத்திரத்தில் தனது கணவரான ராஜனை (அமீர்) கொன்றவர்களை சைலெண்ட்டாக பழிவாங்கி தனது நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். எனவே அந்தப் படம் அவருக்கு முக்கியமானதாகவே கருதப்படுகிறது.

வெற்றிமாறன் செய்த காரியம்; தெறித்து ஓடிய ஆண்ட்ரியா: ஆனால் இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது வெற்றிமாறன் செய்த செயல் ஆண்ட்ரியாவை செமயாக இரிட்டேட் செய்ததாம். அதாவது வெற்றிமாறன் கடுமையாக சிகரெட் அடிப்பவர். ஒருநாளைக்கு 180 சிகரெட்டுகள்வரை புகைத்து தள்ளுவார். அவர் அந்த நிலையில் இருக்கும்போது ஆண்ட்ரியா வடசென்னை குறித்து பேசுவதற்காக சென்றிருந்தாராம். அப்போது வெற்றிமாறன் தொடர்ந்து சிகரெட் அடித்துக்கொண்டே இருந்தாராம்.
இதனால் எதிரில் அமர்ந்திருந்த ஆண்ட்ரியாவால் கண்களையே திறக்க முடியவில்லையாம். ஒருகட்டத்தில் ஆண்ட்ரியாவின் கண்களிலிருந்து கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டதாம். பொறுக்க முடியாத ஆண்ட்ரியா, வெற்றிமாறனிடம் நேரடியாகவே, 'வெற்றிமாறன் நான் போக வேண்டும்' என்று சொல்லி கிளம்பிவிட்டாராம்.
அதன் பிறகு என்ன ஆனது என்று கேட்க சிகரெட் தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். அதனையடுத்து சிகரெட்டை அணைத்தாராம் வெற்றிமாறன். ஒருகாலத்தில் அவ்வளவு சிகரெட்டுகள் புகைத்த வெற்றிமாறன் இப்போது அந்தப் பழக்கத்தை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











