அஞ்சலியோட நல்லா ஒட்டிக்கோ.. ஹீரோவை அடித்து ரொமான்ஸ் சொல்லிக்கொடுத்த இயக்குநர்.. வீடியோவை பாருங்க
சென்னை: ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற பெயரையும் எடுத்தவர். கடைசியாக அவரது இயக்கத்தில் அநீதி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக படம் இயக்கும் வேலையில் இருக்கிறார். இதற்கிடையே அவரது கரியரில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலேயே முக்கியமான படமாக அமைந்தது அங்காடித் தெரு. இந்நிலையில் அது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கிடமிருந்து வந்தவர் வசந்தபாலன். முதல் படமாக ஆல்பம் என்ற படத்தை இயக்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு வந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. முதல் பட தோல்வியை எதிர்பார்க்கவில்லை அவர். இதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு கொஞ்ச வருடங்கள் ஆனது. அடுத்த படத்தை இயக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டார். அந்த கடினமான காலத்தில் நா.முத்துக்குமார், லிங்குசாமி உள்ளிட்டோர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் தந்த வசந்தபாலன்: முதல் படம் தோல்வியடைந்தால் சென்ட்டிமென்ட் ரீதியாக தவறாக கருதும் பழக்கம் கோலிவுட்டில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தனது இரண்டாவது படத்தில் அடித்து நொறுக்கினார் இயக்குநர். வாழ்க்கையில் வென்றவனின் கதைகளை தமிழ் சினிமா பேசிக்கொண்டிருந்த சூழலில்; வாழ்க்கையில் தோற்றவனின் கதையை முதன்முறையாக படமாக்கினார் அவர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஜிவி பிரகாஷும் அந்தப் படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஷங்கர் தயாரித்திருந்தார்.

முக்கியமான படம்: வெயில் படத்தின் வெற்றி வசந்தபாலனின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு அடுத்த பாய்ச்சலை செலுத்தினார். துணி கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வியலை அப்பட்டமாக காண்பித்து அப்ளாஸை அள்ளினார். இப்படம் அவரது கரியருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே முக்கியமான படமாக அமைந்தது. அந்தப் படம் வந்த பிறகு தமிழ்நாடு அரசு பல துணி கடைகளில் சோதனை நடத்தியது நினைவுகூரத்தக்கது. அங்காடித் தெரு வந்த பிறகுதான் துணி கடையில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அந்தப் படம் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, 'உன் பேரை சொல்லும்போதே' பாடல் ஷூட்டிங்கின்போது அப்படத்தின் ஹீரோ மகேஷுக்கு நடனமும், எக்ஸ்பிரெஷனும் ஒழுங்காக வரவில்லை. ஆனால் விடாத வசந்தபாலன் மகேஷை கண்டித்தும், கொஞ்சமாக அடித்தும் நடனம் ஆட வைத்திருக்கிறார். இடை இடையே, ஃபீல் செஞ்சு ஆடு.. அஞ்சலியோட நன்றாக ஒட்டிக்கோ, ஒழுங்காக கையை பிடி.. அவங்களை பாரு எப்படி ஆடுறாங்கனு என ஏகப்பட்ட விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடி வாங்கிலாம் ரொமான்ஸ் செஞ்சிருக்காங்களே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
வசந்தபாலனின் படங்கள்: முன்னதாக வசந்தபாலன் கடந்த சில வருடங்களாகவே வெற்றி படம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக அவர் அநீதி என்ற படத்தை இயக்கியிருந்தார். அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றாலும்; வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications














