நடிகைக்காக ரஜினிகாந்த் செய்தது என்ன தெரியுமா?.. சூப்பர் ஸ்டார் வேற லெவல்தான்
சென்னை: ரஜினிகாந்த் இந்திய அளவில் அடையாளப்பட்டவர். அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசனுக்கு எப்படி மெகா ப்ளாக் பஸ்டரை லோகி கொடுத்தாரோ அதேபோல் தங்கள் தலைவர் ரஜினிக்கும் கொடுப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ரஜினி பற்றி சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த்தான் திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். ஹீரோ என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதை உடைத்து காண்பித்தவர் அவர். தன்னுடைய துறுதுறு உடல்மொழியாலும். வித்தியாசமான தமிழ் உச்சரிப்பாலும் உச்சத்துக்கு சென்றவர் அவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருமே ரஜினிகாந்த்தை மெய் மறந்து ரசிப்பார்கள். இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை கண்டு இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறது.

வேட்டையன்: 75வயதில்கூட படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தார்கள். அதனையடுத்து இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
ரஜினி என்றால் எளிமை: ரஜினிகாந்த்துக்கு இல்லாத புகழ் இல்லை, பணம் இல்லை. அவர் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார். இருந்தாலும் தான் நடத்துநராக இருந்தபோது தன்னிடம் இருந்த எளிமையை இன்னமும் அவர் இழக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள். அதுமட்டுமின்றி தன்னுடைய ஆரம்பகாலத்தில் தனக்கு உதவியவர்களையும் அவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மறக்கவில்லை. அந்த பண்பும்கூட அவர் இவ்வளவு வளர்ந்ததற்கு ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ரஜினி செய்த செயல்: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது படையப்பா படத்தில் ரஜினிக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் அனிதா வெங்கட். முதலில் அந்தப் படத்தில் ரஜினிக்கு ஒரு மகள் என்கிற ரீதியில்தான் கதை இருந்ததாம். ஆனால் அனிதா வெங்கட் அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துகொண்ட பிறகு கதையில் எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது போன்றும்; அனிதா வெங்கட்டை அந்த கேரக்டருக்கு போடும்படியும் சொல்லிவிட்டாராம் ரஜினிகாந்த்.
செம சூப்பர்: அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அனிதா வெங்கட்டி நடிப்பை ரஜினிகாந்த் ரசித்தாராம். ஒருமுறை ஷூட்டிங்கின்போது அனிதாவுக்கும் அவரது தாய்க்கும் நாற்காலி போடவில்லையாம். அதை கவனித்துவிட்ட ரஜினியோ, நான் எப்படி ஒரு நடிகரோ அதேபோல்தான் அனிதாவும் ஒரு நடிகை. அதன் காரணமாக எனக்கும் என்ன மரியாதை கொடுக்கிறீர்களோ அதே அளவு மரியாதையை அவருக்கும் தர வேண்டும் என்று கூறினாராம்.


Click it and Unblock the Notifications











