Anushka - செல்வராகவன் மீது சந்தேகப்பட்ட அனுஷ்கா.. குழப்பத்தை தெளிவுப்படுத்திய ஆர்யா
சென்னை: Anushka (அனுஷ்கா) செல்வராகவன் மீது அனுஷ்கா சந்தேகப்பட்டதும் அவரது குழப்பத்தை ஆர்யா தெளிவுப்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது.
அருந்ததி படத்துக்கு பிறகு முன்னணி நடிகையாக மாறினார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அனுஷ்கா ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மேனேஜர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பறந்து பறந்து நடித்துக்கொண்டிருந்தார். தமிழில் விஜய்யுடன் அவர் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால் விக்ரமுடன் தாண்டவம், ரஜினியுடன் லிங்கா, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சிம்புவுடன் வானம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார்.

பறிபோன வாய்ப்புகள்: இப்படிப்பட்ட சூழலில்தான் பாகுபலி படம் வந்தது. ராஜமௌலி இயக்கிய அந்தப் படம் இந்திய அளவில் பெரும் ஹிட்டடிக்க பரவலாக அறியப்படும் நடிகையாக மாறினார் அனுஷ்கா. அப்படிப்பட்ட சூழலில் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பிறகு அதனை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அனுஷ்கா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அனுஷ்கா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்துக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார் அனுஷ்கா. ராதா இசையமைப்பில், மகேஷ் பாபு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் உலகம்: அனுஷ்காவின் கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமைந்தது இரண்டாம் உலகம். செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில் கடந்த ஆம் ஆண்டு படம் வெளியானது. படம் அப்போது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அனுஷ்காவின் நடிப்பும் அதில் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.
விலக நினைத்த அனுஷ்கா: ஆனால் இந்தப் படத்திலிருந்து அவர் பாதியிலேயே விலக நினைத்திருக்கிறார். அதாவது செல்வராகவன் படத்தின் கதையை முழுதாக கூறவில்லையாம். அனுஷ்காவின் கதாபாத்திரத்தை மட்டும் சொல்லியிருக்கிறார். செல்வராகவன் பெரிய இயக்குநர் என்பதால் நம்பி நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் ஜார்ஜியாவில்தான் நடந்தது.
சந்தேகம்: படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்த சூழலில் இந்தப் படம் சரியாக வருமா என்ற சந்தேகம் அனுஷ்காவுக்கு முதலில் எழுந்திருக்கிறது. ஒருகட்டத்தில் நிச்சயம் இந்தப் படம் தோற்றுப்போகும் என நினைத்த அவர் படத்திலிருந்து விலகுவதற்கு முடிவு எடுத்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ஆர்யாவோ, ஏன்மா நான் ஹீரோ. எனக்கே அவர் கதை சொல்லல. ஆனால் செல்வராகவன் திறமை வாய்ந்த இயக்குநர். தைரியமா நடி என குழப்பத்தை தெளிவுப்படுத்தியிருக்கிறார். ஆர்யா சொன்னதற்காக அந்தப் படத்தில் நடித்தாராம் அனுஷ்கா.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஸ்பெஷல் ஷோ போடப்பட்டிருக்கிறது. அதை பார்த்த அனுஷ்காவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாம். உடனடியாக செல்வராகவனை சந்தித்து கட்டி அணைத்து தன்னுடைய நன்றியையும், வாழ்த்தையும் சொன்னாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











