AR Rahman: ஏஆர் ரஹ்மானால் இந்தியன் படத்துக்கு வந்த சிக்கல்... கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: உலக அரங்கில் இந்தியத் திரையிசையின் பெருமிதமாக பார்க்கப்படுபவர் ஏஆர் ரஹ்மான்.
ஆஸ்கர், பாப்டா, கிராமி என ஏஆர் ரஹ்மான் வாங்காத விருதுகளே கிடையாது.
மணிரத்னத்துக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் காம்போவில் ஏஆர் ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
ஏஆர் ரஹ்மான் - ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் இசைப்புயலால் கடைசி நேரத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மானால் இந்தியன் படத்துக்கு வந்த சிக்கல்: மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான். இசையுலகில் ரோஜாவாக என்ட்ரி கொடுத்து தற்போது இசைப் புயலாக மாஸ் காட்டி வருகிறார். மணிரத்னம் - ஏஆர் ரஹ்மான் காம்போவிற்குப் பின்னர், ஷங்கரும் ஏஆர் ரஹ்மானும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.
ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் முதல் ஐ, 2.O வரை ஏஆர் ரஹ்மானின் இசை பெரும் பலமாக இருந்தது. இக்கூட்டணியில் வெளியான முக்கியமான படங்களில் ஒன்று இந்தியன். உலக நாயகன் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். 1996ம் ஆண்டு வெளியான இந்தியன், அதிரி புதிரியாக ஹிட் அடித்தது.
கமலின் இந்தியன் தாத்தா கெட்டப், ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம், பாடல்கள், ஷங்கரின் மேக்கிங் ஆகியவை 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம்பிடித்தன. அதன் தாக்கத்தில் தான் இந்தியன் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஆனால், இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து வருகிறார். இருப்பினும் இந்தியன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்த சில பிஜிஎம் துணுக்குகள் 2ம் பாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதற்கு ஏஆர் ரஹ்மானும் ஓக்கே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் படத்தின் பாடல்களை ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ஸ்டூடியோவில் கம்போஸிங் செய்துள்ளார். படத்திற்குத் தேவையான அத்தனை பாடல்களையும் அங்கிருந்தே ட்யூனாக கம்போஸ் செய்து தனது ஹார்ட்டிஸ்க்கில் சேவ் வைத்திருந்துள்ளார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ஏஆர் ரஹ்மான், அந்த ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து வந்துள்ளார்.
ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் ஏஆர் ரஹ்மானின் ஹார்ட் டிஸ்க்கை ஏர்போர்ட் ஆபிஸர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அதிலிருந்த அத்தனை ஃபைல்களும் டெலிட் ஆகியுள்ளன. ஆனால் அது தெரியாமல் சென்னை வந்த ஏஆர் ரஹ்மான், ஹார்ட் டிஸ்க்கில் இருந்த ட்யூனை ஷங்கருக்கு போட்டுக் காட்டுவதற்காக ஓபன் செய்துள்ளார். அப்போது தான் அவருக்கு விஷயமே தெரியவந்துள்ளது.
மொத்த பாடல்களும் டெலிட் ஆகியிருந்ததால், ஷங்கர் ரொம்பவே பதறிவிட்டாராம். இந்தியன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பின்னர் தான் இந்த சிக்கல் எழுந்துள்ளது. உடனே ஏஆர் ரஹ்மான் அவசர அவசரமாக வேறு ட்யூன்கள் கம்போஸ் செய்துகொடுத்து பாடல்களை முடித்துள்ளார். அதேபோல், பிஜிஎம் இசைக்கும் வேறு கம்போஸிங் செய்துள்ளார். அதன்பிறகே பாடல்களை ஷூட் செய்து இந்தியன் படத்தை ரிலீஸ் செய்தாராம் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











