தனது பாடலை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து பூரித்து போகும் ஏ.ஆர்.ரகுமான்.. எந்த பாட்டு தெரியுமா?
சென்னை: இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமாவில் இருந்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா மற்றும் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அவரது இசைக் கச்சேரி நடக்கிறது என்றால், சி.எஸ்.கே போட்டியை காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் புறப்பட்டு வருவது போல் வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இவரது இசையில் உருவான ஒரு பாடலை ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்த்து ஏ.ஆர். ரகுமான் பூரித்துப் போய் நிற்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் குறித்து யார் பேசினாலும் அவர்கள் இளையராஜா குறித்தும் கட்டாயம் பேசாமல் இருக்க மாட்டார்கள். காரணம் இளையராஜா எனும் இசை ஆளுமை திரை இசையின் உச்சத்தில் இருக்கும் போது, அவரிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர். ரகுமான் தனக்கு கிடைத்த இசையமைப்பாளர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தனது, திறமையை வெளிக்கொண்டு வந்தார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான படமான ரோஜா படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
திரை இசையில் புதிய சப்தத்தை, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இதனாலோ என்னவோ தமிழ் சினிமாவின் நாயகனை பாலிவுட் சினிமா வரவேற்றுக் கொண்டது. ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறார். தமிழில் இவரது இசையில் கடைசியாக வெளியான படம் என்றால் அது, தனுஷின் ராயன் படம் தான். இந்த படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் செஞ்சுரி அடித்திருந்தார். பாடல்களில், உசுரே நீதானே பாடலுக்கு தமிழ் மொழி தெரியாத இசைப்பிரியர்களுமே அடிமையானார்கள்.

ஏ.ஆர். ரகுமான்: இப்படி இருக்கும்போது, இவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள தமிழ் படம் என்றால் அது, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம்தான். இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் அடிப்படையில் மிகவும் சாதுவான அதே நேரத்தில் மிகவும் துள்ளலான மனிதர். தனது இசைக் கச்சேரியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து ஆடி பாடி ஒரு பாடலைக் கொண்டாடினாலும், அவர் அமைதியாக இருப்பார்.
வீடியோ: ஆனால் ஒரு பாடலை ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்த்து, ஏ.ஆர். ரகுமான் உற்சாகமடைந்து பூரிப்பு அடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறது. ஆனால், ரசிகர்களின் உற்சாகம் ஆரவாரம், தான் இசையமைத்த குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு ரசிகர்கள் பெருமளவு வரவேற்பு கொடுப்பதை பார்த்து, பூரிப்பு அடைந்தார் ஏ.ஆர்.ஆர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











