A.R.Rahman - காதலன் பட மொத்த இசையை டெலிட் செய்த சவுண்ட் இன்ஜினியர்.. சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) காதலன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்து வைத்திருந்த பின்னணி இசையை அவரது சவுண்ட் இன்ஜினியரான ஹெச்.ஸ்ரீதர் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் அண்மையில் வெளியாகின. படத்தில் அவரது இசையமைபில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஷங்கர் ஸ்பெஷல்: ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றும் இயக்குநர்களுக்கு எப்போதுமே சிறந்த இசையை கொடுக்கக்கூடியவர்தான். ஆனால் அவருக்கு சிலர் ஸ்பெஷலாக இருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் இருப்பவர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர். ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேனிலிருந்து அவர் கடைசியாகை இயக்கிய 2.0வரை (அந்நியனுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ்) ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்.
காதலன்: குறிப்பாக அதில் காதலன் படத்தை சொல்ல வேண்டும். படத்தின் அத்தனை பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வளவு சிறப்பாக கொடுத்திருப்பார். அதேபோல் படத்தின் பின்னணி இசையையும் மிகச்சிறப்பாக கொடுத்திருப்பார். ஆனால் அந்த பின்னணி இசை கொடுத்ததற்கு பின்னால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது, காதலன் படம் ரிலீஸாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. படத்துக்கான பின்னணி இசை அமைப்பதற்கு ஏற்கனவே தாமதம் ஆகியிருக்கிறது. ஒருவழியாக பின்னணி இசை அனைத்தையும் முடித்து ஃபைனல் அவுட்புட்டோடு அமர்ந்திருக்கிறார். இயக்குநர் ஷங்கரும் ரஹ்மானின் ஸ்டூடியோவில் இருந்திருக்கிறார். பின்னணி இசை வந்துவிட்டால் லேபுக்கு சென்று கொடுத்து பிறகு பிரிண்ட்டை வாங்கி செல்வதற்காக விநியோகஸ்தர்களும் ஸ்டூடியோவுக்கு வெளியே இருந்திருக்கின்றனர்.
அந்த சமயத்தில் ரஹ்மானின் சவுண்ட் இன்ஜினியரான ஹெச்.ஸ்ரீதர் வந்திருக்கிறார். வந்தவர் தவறுதலாக ஏதோ ஒரு பட்டனை அழுத்திவிட மொத்த இசையும் டெலிட் ஆகியிருக்கிறது. ரஹ்மான் பின்னணி இசையமைத்திருந்த ஒன்றுகூட இல்லை. எல்லோரும் அதிர்ச்சியடைய ரஹ்மானோ எதுவும் சொல்லாமல் ஸ்டூடியோவுக்கு மேலே சென்று தொழுகை செய்திருக்கிறார். பிறகு கீழே வந்தவர் ஏற்கனவே வாசித்ததில் தன்னுடைய நியாபகத்தில் இருப்பதை வாசித்து, மற்றவர்கள் நியாபகத்தில் இருப்பதையும் வாசிக்க சொல்லி ஒரே நைட்டில் காதலன் ரீ ரெக்கார்டிங்கை முடித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











