Vishal: தினமும் கட்டிங் போடாமல் தூங்க முடியாது.. விஷாலுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. அப்பவே சொன்ன ஆர்யா!

சென்னை: சினிமாவுக்காக பல நடிகர்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு நடித்து வருகின்றனர். சில இயக்குநர்கள் ஹீரோக்களை புதிதாக காட்டுகிறேன் என்றும் தாங்கள் நினைத்த கனவு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களை பெண்டு நிமிர்த்தி வருகின்றனர். அலுங்காமல் குலுங்காமல் டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு சில ஹீரோக்கள் ஸ்டார்களாகி விடும் நிலையில், கமல்ஹாசன் போல சில நடிகர்கள் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர்.

சியான் விக்ரம், சூர்யா வரிசையில் விஷாலும் அவன் இவன் படத்துக்கு அந்த ரிஸ்க்கை அதிகமாகவே எடுத்திருந்தார். நடிகர் விஷால் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கூட கேர்ள் ஃபிரெண்ட் உடன் சுற்றுவது போல பிராங்க் வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு செம ஃபார்மில் ஃபிட்டாக இருந்து வந்தார்.

vishal throwback arya

ஆனால், இந்த புத்தாண்டுக்கு அவரது நிலைமை இப்படி முற்றிலுமாக மோசமடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என மதகஜ ராஜா படத்தின் புரமோஷனுக்காக அந்த நிலைமையிலும் அவர் பங்கேற்றதை பார்த்து ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கண்கலங்கி போயுள்ளனர். இந்நிலையில், விஷாலுக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் குறித்து ஆர்யா பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று தீயாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

விஷாலுக்கு வைரல் ஃபீவர் தானா?: நடிகர் விஷால் சுந்தர். சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த மத கஜ ராஜா படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்து நடித்த நடிகர்களில் முக்கியமான விஷால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கைகள் நடுங்க, வாய் குளற வந்து பேசிய காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் அனகோண்டா காமெடி எல்லாம் வைத்து 100 கோடி வசூல் வேட்டை நடத்திய விஷாலுக்கு அப்படி என்னதான் ஆச்சு? மருத்துவர்கள் சொல்வது போல வெறும் வைரல் ஃபீவர் மட்டும்தானா? என்கிற சந்தேகங்களை பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் எழுப்பி உள்ளனர்.

பாலா தான் காரணமா?: அவன் இவன் படத்தில் ஒன்றரை கண் நபர் போல விஷால் நடிக்க செய்த செயல்கள் தான் இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவுக்கு காரணம் என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தனது வீடியோவில் பேசி பகீர் கிளப்பியுள்ளார். இந்நிலையில், நடிகர் ஆர்யா பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்றையும் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து இதுதான் அவரது நிலைமைக்கு காரணம் என்கின்றனர்.

ஆர்யா சொன்ன மேட்டர்: அவன் இவன் படத்தில் விஷால் மற்றும் ஆர்யா பாலா இயக்கத்தில் நடித்திருந்தனர். ஆர்யாவை விட விஷாலின் கதாபாத்திரம் தான் ரொம்பவே சிரமமான கதாபாத்திரம். அதற்காக ஒட்டுமொத்த ஒத்துழைப்பையும் அவர் கொடுத்தது தான் சிக்கலாகி விட்டது என்கின்றனர். நடிகர் ஆர்யா நிகழ்ச்சி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசும் போது, விஷால் தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி அழுவான். தலைவலிக்குதுன்னு சொல்வான்.

கட்டிங் போடாமல் தூங்க முடியாது: பாலா சார் அந்த ஒன்றரை கண்ணை வைத்துக் கொண்டு அவன் கஷ்டப்பட்டு நடிக்கும் போதே, இங்கே பாரு, அப்படியே அந்த கண்ணை லெஃப்ட்ல கொண்டு வா, ரைட்ல கொண்டு வான்னு படுத்தி எடுப்பாரு, அவர் என்னை நிஜமாவே ஒன்றரை கண்ணுடைய நபர் என்றே நினைச்சிட்டாரா என்று கேட்பான். நீதான மச்சான் ஆசைப்பட்ட, பண்ணுன்னு சொல்வேன் என்று சொன்ன ஆர்யா, தலை வலிச்சா ஒரு ஹாஃப் சாப்பிடு சரியாய் போயிடும் எனக் கூறினேன். இப்போதெல்லாம் கட்டிங் போடாமல் அவனால் தூங்கவே முடியாது என்றும் பேசியுள்ள வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X