ரஜினி படத்தில் கஷ்டப்பட்டு ஆஷா போஸ்லே பாடிய பாடல்.. 6 மணி நேரம் ரெக்கார்டிங்.. இவ்வளவு டெடிகேஷனா?

சென்னை: பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தனது 92ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பல மொழிகளில் அவர் பாடியதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள். ஆஷா போஸ்லேவுக்கான இறுதி சடங்குகள் நாளை மாலை மும்பையில் நடைபெறும் என்று குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் தமிழில் கஷ்டப்பட்டு பாடிய பாடல் ஒன்றை பார்ப்போம்.

இந்திய அளவில் பிரபலமானவர் ஆஷா போஸ்லே. ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடியிருக்கிறார். இவரது அக்காதான் இன்னொரு பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் ஆவார். சிறு வயதில் சங்கீதம் கற்றுக்கொண்டு தனது பத்தாவது வயதிலேயே பாடல்களை ஆரம்பித்தார் லதா. பாட ஆரம்பித்த சில காலத்திலேயே முன்னணி பாடகியாக மாறிவிட்டார். மேலும் சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனையும் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asha Bhosle Dies at 92 The Rajinikanth Song She Struggled to Sing

தமிழில் ஹிட் பாடல்கள்: தமிழில் அவர் குறைந்த அளவிலான பாடல்களையே பாடியிருக்கிறார். இளையராஜா இசையமைப்பில் முதல்முதலாக பாட ஆரம்பித்த அவர்; தொடர்ச்சியாக அவருக்கு செண்பகமே செண்பகமே, நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, சாத்து நட சாத்து உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் ரஹ்மான் இசையில் செப்டம்பர் மாதம், தேவா இசையில் எங்கெங்கே, வித்யாசாகர் இசையில் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். குறைந்த எண்ணிக்கையில் பாடல்கள் பாடியிருந்தாலும் ஒவ்வொன்று ஆகச்சிறந்ததாகும்.

விருதுகள்: ஆஷா போஸ்லேவுக்கு இந்திய திரைப்பட துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய அரசு சார்பில் 2008ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை வென்றார். இவை தவிர்த்து கிராமி விருதையும் வென்றிருக்கும் அவர் மொத்தம் 12,000 பாடல்கள்வரை பாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி அதிக பாடல்களை பதிவு செய்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தவர். சூழல் இப்படி இருக்க 92 வயதாகும் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

Also Read
ஆஷா போஸ்லே தமிழில் பாடிய ஹிட் பாடல்கள் தெரியுமா?.. ஒவ்வொன்றும் க்ளாஸிக்.. எப்போதும் அழிவில்லை
ஆஷா போஸ்லே தமிழில் பாடிய ஹிட் பாடல்கள் தெரியுமா?.. ஒவ்வொன்றும் க்ளாஸிக்.. எப்போதும் அழிவில்லை

கஷ்டப்பட்டு பாடிய பாடல்: உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடக்கவிருக்கின்றன. இந்நிலையில் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற, 'கொஞ்ச நேரம்' பாடலை பாடுவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டாராம். அதாவது அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. பாடலை படித்து பார்த்த இயக்குநர் பி.வாசு, 'எல்லாமே நன்றாக இருக்கிறது. ரஜினியின் அழகையும் இதில் எழுத முடியுமா?' என்று கேட்டாராம்.

ஆஷா செய்தது: உடனே அவர், 'கண்ணில் ஓரழகு கையில் ஓரழகு உன்னால் பூமி அழகே.. உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே' என்று எழுதினாராம். அதுவரை ஆஷா போஸ்லேதான் பாடப்போகிறார் என்று தெரியாதாம். அதேபோல் ஆஷா போஸ்லேவுக்கு தமிழில் 'ழ' உச்சரிப்பு ஒழுங்காக வராது என்றும் தெரியாதாம். பாடல் ரெக்கார்டிங் ஆரம்பித்த பிறகு அந்த வரிகளை பாடுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டாராம். உடனே அருகில் இருந்தவர்கள் வேண்டுமென்றால் வரிகளை மாற்றிவிடலாம் என சொல்ல; அதற்கு ஆஷா ஜியோ, 'அதெல்லாம் இல்லை. வாத்தியார் எழுதியதை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது. இதையே நான் பாடுகிறேன்' என சொல்லி மீண்டும் மீண்டும் முயற்சித்து எப்படியோ பாடிவிட்டாராம். மொத்தம் அந்தப் பாடல் ரெக்கார்டிங் இந்த ஒரு விஷயத்தால் மொத்தம் ஆறு மணி நேரம் நடந்ததாம். இதனை யுகபாரதி ஒரு நிகழ்ச்சியி பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X