அசின் முகமெல்லாம் வெட்கம்.. தனுஷ் புகழ புகழ மேடத்தோடு ரியாக்ஷன் க்யூட்டோ க்யூட்

சென்னை: நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தினை விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். மீண்டும் நடிக்க வரமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை அசின் தமிழில் அறிமுகமானபோது நடித்த நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்கள் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க சூர்யாவுக்கு ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரம் இன்றுவரை யாராலும் செய்ய முடியாதது. கஜினி படத்தின் மெகா வெற்றி அசினின் மார்க்கெட்டை தமிழில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

Asin s Cute Reaction to Dhanush s Praise Goes Viral
Photo Credit:

பாலிவுட்டிலும் டாப்தான்: இங்கே அசுரத்தனமாக வளர்ச்சியடைந்த அவர் ஹிந்திக்கும் சென்றார். பாலிவுட்டில் அசினால் தாக்குப்பிடிக்க முடியுமா என பலரும் யோசித்த சூழலில்; அசினின் கொடி அங்கேயும் உயர பறந்தது. அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என அங்கும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியானார். தமிழில் அவர் கடைசியாக காவலன் படத்தில்தான் நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு முழுக்க முழுக்க ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்டார் அவர்.

Also Read
ஹே சூர்யா போ போ.. கணவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஜோதிகா.. க்யூட் வீடியோ
ஹே சூர்யா போ போ.. கணவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஜோதிகா.. க்யூட் வீடியோ

திருமணம் செய்துகொண்ட அசின்: அவரது கரியர் ஹிந்தியில் பீக்கில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை அக்ஷய் குமார் மூலமாக சந்தித்தார் அசின். அப்போது ஆரம்பித்த அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து; கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கரியர் பீக்கில் இருந்தபோதே அசின் திருமணம் செய்துகொண்டது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தியது.

இப்போதும் அசின் பிஸிதான்: திருமணத்துக்கு பிறகு மொத்தமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். முழுக்க முழுக்க குழந்தையை வளர்ப்பது, வீட்டை நிர்வகிப்பது, கணவரின் தொழிலுக்கு உதவியாக இருப்பது என இப்போதும் அசின் பிஸிதான். அதேசமயம் அதிகம் கேமராவுக்கு முன்பு வருவதையும் தவிர்த்துவருகிறார். ஆனால் அவரது ரசிகர்களோ அசின் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று ஏங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அசின் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அசின் பீக்கில் இருந்தபோது ஒரு விருதை பெற்றார். அவருக்கு அந்த விருதை வழங்கியவர் தனுஷ். அப்போது பேசிய தனுஷ், 'அசின் எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியில் அவரே டப்பும் செய்துவிடுகிறார். நான் ஹிந்தியில் ஒரு படத்துக்கு டப் செய்வதற்கே மூச்செல்லாம் முட்டிவிட்டது' என புகழ்ந்தார். அதை கேட்ட அசினோ வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க சிரித்த வீடியோதான் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X